காலம் காலமாக ஆன்மிகம் என்பது தனியான ஒன்று எனவும் விஞ்ஞானம் என்பது வேறான ஒன்று எனவும் ஒருபுறம் மக்கள் நம்பி வந்துள்ளனர் மறுபுறம் மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், உண்மை நிலை என்பது உலகம் போற்றும் விஞ்ஞானியான Albert Einstein கூற்றுக்கேற்ப “விஞ்ஞானம் இல்லாத மெஞ்ஞானம் குருடு; மெஞ்ஞானம் இல்லாத விஞ்ஞானம் நொண்டி” என்ற வகையில் உள்ளது.
கடவுள் என்ற சொல் கருத்து முதல் வாதம் சார்ந்த பக்தி நிலை (நம்பிக்கை) ஆன்மிகத்தில் ஒரு நபரை குறிப்பதாகவும் கருத்து முதல் வாதம் சார்ந்த ஞான நிலைக்குரிய (Enlightment) ஆன்மிகத்தில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள (Omnipresent) ஒரு மறைபொருளைக் குறிப்பதாகவும் உள்ளது. இதனால் தமிழ்மொழி அடிப்படையில் “கடவுள்” என்ற சொல் நம்பிக்கையின்படி பெயர்ச் சொல் நிலையிலும் உணர்நிலையில் (Enlightment) எங்கும் நீக்கமற நிறைந்துள்ள (Omnipresent) ஒரு மறைபொருள் என்ற நிலையில் உள்ளே கடந்து நமக்குள் இருப்பதை உள்ளுணர்வாக உணரும் ஒரு செயலைக் குறித்து நிற்பதால் வினைச்சொல் நிலையிலும் இரட்டை நிலை கொண்டதாக உள்ளது.
பொருள்முதல்வாதம் சார்ந்த கடவுள் மறுப்பாளர்கள் (நாஸ்திகவாதிகள்) மறைபொருள் என்ற கோட்பாட்டினை மறுதலிக்கும் அதேநேரம் பொருள் என்பது ஐந்து புலன் உணர்வுக்கு உட்பட்டதாக மட்டுமே இருக்க முடியும் என வாதிடுவர்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தொடரில் ஞானிகளின் வழிகாட்டலுக்கு அமைவாக மாதா பிதாவைக் காட்ட, பிதா குருவைக் காட்ட, குரு தெய்வத்தைக் காட்டுவார் என்பதற்கு அமைவாக நான் குருவாக ஏற்றுக்கொண்டு அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி தந்த விஞ்ஞானத்துடன் இணைந்த மெஞ்ஞானத் தெளிவின் அடிப்படையிலும், நான் கற்றுணர்ந்ததன் அடிப்படையிலும் எனது சிற்றறிவுக்கு உட்பட்டு முன்வைப்பது இந்தப் பிரபஞ்சத்துக்குள்ளும் பிரபஞ்சம் கடந்தும் பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சியில் முடிவுப் பொருட்களாகிய தோற்றப் பொருட்களில் இருந்து அவற்றின் மூலத்தை நோக்கிய ஆய்வு விஞ்ஞானமாகவும், மூலத்தில் இருந்து முடிவுப் பொருட்களாகிய தோற்றப் பொருட்கள் பற்றிய ஆய்வு மெஞ்ஞானமாகவும் அமைகின்றன.
“இருப்பது ஒரு பொருள் மட்டுமே. அதுவே உண்மைப் பொருள். அதனால் அது மெய்ப்பொருள்”
“ஏனைய அனைத்தும் தோற்றப் பொருட்களாகவும் நமது அனுபவங்களாகவும் உள்ளவை”
“தோற்றங்கள் யாவும் தோற்றங்கள் அல்ல. அனைத்தும் நிகழ்வுகள் என அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி விஞ்ஞான அடிப்படையில் விளக்கியுள்ளார்”
“அனைத்து நிகழ்வுகளின் (தோற்றங்கள்)
இருப்பது மெய்ப்பொருள் மட்டுமே”
இதனையே ஊடாகவும் வியாபகமாக வியாபித்து உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த ஐயன் திருவள்ளுவர் தனது மெய்யுணர்தல் அதிகாரத்தில் குறள் எண் 355 ஊடாக,
“எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என தெளிவுறக் கூறியுள்ளார்.
வெள்ளிவிழா காணும் நமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலட்சணையில் இதனையே “மெய்பொருள் காண்பது அறிவு” என மகுட வாசகமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தையின் பார்வையில் நாஸ்திகம் என்பது கடவுள் மறுப்பு அல்ல, மாறாக பொருள்முதல்வாதமாக இந்த மெய்ப்பொருள் இருப்பை ஏற்றுக்கொள்வது எனவும் அதனை ஏற்றவர்களே உண்மையான நாஸ்திகர்கள் எனவும் அதேநேரம் இந்த மெய்ப்பொருள் இருப்பு என்ற உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களே உண்மையான ஆஸ்திகர்கள் என்பதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாசா விஞ்ஞான கூடத்தில் விஞ்ஞானிகளுக்கு வானியல் சாஸ்திர பாடம் கற்பித்த அருட்தந்தை அவர்கள் ஆன்மிகத்தினை விஞ்ஞானத்துடன் இணைத்து விளக்கிய பெருமைக்குரியவர்.
இவரது விளக்கம் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக உள்ளதால் இவர் பாமர மக்களின் தத்துவஞானி என அழைக்கப்படுவது வழக்கம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தந்த விஞ்ஞானத்துடன் மெஞ்ஞானத் தெளிவினை என் சிற்றறிவுக்குட்பட்டு சுருக்கமாக முன்வைக்கின்றேன்.
1) மெய்ப்பொருள் என்பது எங்கும் நீக்கமற நிறைந்தும் இறைந்தும் இருக்கும் பாய்மப் பொருள் (Divine Fluid) இதுவே ஆதியெனவும் பூரணம், பூச்சியம், பிரம்மம், பரம்பொருள், பரலோக பிதா, அல்லா என பல நாமங்கள் கொண்டது.
2) இது தன்னகத்தே நான்கு தன்மைகளையும் மூன்று திறன்களையும் இயல்பாகவே (Naturally) கொண்டுள்ளது.
3) தன்மைகளாவன வற்றாஇருப்பு ((Everlasting), பேராற்றல் (Supper Power), பேரறிவு (Supper Consciousness), காலம் (Time) என்பவை நான்கு வளங்கள் எனவும் கூறப்படும்.
4) மூன்று திறன்களாவன தன்மாற்றம் (Self Transformation), இயல்பூக்கம் (Adaptation) கூர்தலறம் (Course and Effect)
05) தன்மாற்றம் என்பது இருப்பு நிலையாகிய (Stock Force) மெய்ப்பொருள் தன்னகத்தே கொண்டுள்ள தன்னைத் தானே சூழ்ந்து அழுத்தும் ஆற்றலால் (Self Compressive Force) எந்தத் தேவையும் இன்றி எந்த முயற்சியும் இன்றி எந்த விருப்பமும் இன்றி தன்னையே இறுக்கி சுருக்கி நொருங்கி துகள்களாக மாற்றம் பெறும் இதுவே இறைத்துகள் (God Particle) எனப்படும்.
6) இத்துகளானது துணிக்கை நிலை, அலை நிலை என இரட்டை நிலைக்குரியது (Dual Nature). விஞ்ஞானத்தில் இலத்திரன் (Electron) இத்தகைய நிலைப்பாட்டினை கொண்டது. ஆனால் இத்துகள் இலத்திரனையும் விட மிக மிக நுண்ணியது.
7) மேலும் மெய்ப்பொருளாகிய இருப்புநிலையின் சூழ்ந்து அழுத்தும் ஆற்றலால் (Self Compressive Force) இறைத்துகள்கள் குறிப்பிடக்கூடிய அளவில் ஒன்று சேர்ந்து கொத்தியக்கமாக (Cluster) இயங்கும்போது பரம அணுக்கள் (Vethan) எனப் பெயர் பெறுகிறது. இதுவே தத்துவார்த்த அடிப்படையில் பஞ்சபூதங்களின் முதல் தத்துவமாகிய விண் அல்லது ஆகாஸ் தத்துவம் ஆகும்.
8) மேலும் மெய்ப்பொருளாகிய இருப்புநிலையின் சூழ்ந்து அழுத்தும் ஆற்றலால் (Self Compressive Force) பரம அணுக்கள் கொத்தியக்கமாகி தோன்றும் துணிக்கை நிலைகளே உப அணுத்துணிக்கைகள் (Sub atomic particles).
9) இவை திணிவு வேறுபாடு மற்றும் தற்சுழற்சி (Self rotation) வேறுபாட்டின் அடிப்படையில் இலத்திரன் (Electron), புரொட்டோன் (Proton), நியூத்திரன் (Neutron), கருந்துளை (Back Hole) என நான்கு வகைகளாக அமைகின்றன.
10) துணிக்கை நிலைக்குரிய இவை அனைத்தும் இருப்புநிலையின் அழுத்தும் ஆற்றலால் (Self Compressive Force) ஏற்படும் உரசல் காரணமாக சுழற்சி வேகம் கூடுவதால் துணிக்கை நிலையை இழந்து அலை நிலையாகி ஈற்றில் இருப்பு நிலைக்கு உள்ளாகும்.
11) துணிக்கை நிலைக்கும் இருப்பு நிலைக்கும் இடைப்பட்ட அலைநிலை பிரபஞ்சம் முழுவதுமாக தன்னை வெளிப்படுத்தாத (Unmanifested) காந்தப்புலத்தினைத் தோற்றுவித்து பிரபஞ்ச இருப்புக்கும் இயக்கத்திற்கமான காந்தக் களமாக செயற்படுகின்றது.
12) அலைநிலையாக மாறாத உப அணுத்துணிக்கைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒன்றிணைந்து இணையும் எண்ணிக்கைக்கேற்பவும் உள்ளுறையாக (Entrophy) உள்ளடக்கும் ஆதார சக்தியின் (அணுசக்தி- Atomic energy) அளவிற்கேற்ப இயற்பியலில் (physics) இருந்து வேதியல் (Chemistry) அணுக்களாக (H,He,Li, Be,B,C.........)தோற்றம் பெற்றன.
13) இவ்வேதியல் அணுக்களின் கூடுதல் நிலைக்கேற்பவே மூலக்கூறுகள் தோன்றி பஞ்சபூதத் தத்துவத்தின் அடுத்தநிலையாகிய ஐதரசன், நைதரசன், ஒட்சிசன், காபனீரொட்சைட்………… என வாயுக்கள் தோன்றின.
14) இவற்றில் ஒட்சிசன் அழுத்தக் காற்று எனவும் அதுவே பஞ்சபூதத் தத்துவத்தின் அடுத்தநிலையாகிய நெருப்பாக (தேயு) உருவெடுத்தது
15) ஐதரசனும் ஒட்சிசனும் 2:1 என்ற விகிதத்தில் ஒன்று சேர்ந்து பஞ்சபூதத் தத்துவத்தின் அடுத்தநிலையாகிய நீர் (அப்பு) உருவாகியது
16) இதுபோன்று இருபதையும் (20) விடு அணுத்திணிவில் பாரமானவை பஞ்சபூதத் தத்துவத்தின் அடுத்தநிலையாகிய மண்ணினைத (பிருதுவி) தோற்றுவித்தன.
17) இப்பஞ்ச பூதங்களின் ஒன்றிணைவு விகிதாசாரமற்ற முறையில் (Non ratio) அமையும் போது அவை உயிரற்ற தோற்றப்பொருட்களாகவும் (Non living entitiy) ஒன்றை ஒன்று பாதிக்காத அளவில் குறிப்பிட்டு விகிதாசாரத்துக்கு (Ratio) உட்பட்டு சேரும்போது அவை உயிரினங்களாகவும் (Living Entitiy) பரிணமித்துள்ளன.
18) இந்த வகையில் எளிமையான இரசாயன மூலகங்கள் குறிப்பிட்ட இரசாயன பௌதீக சூழல் நிபந்தனைகளில் ஒன்றிணைந்தே ஆதியானதும் மிகவும் எளிமையானதுமான வைரஸ் போன்ற உயிர்கள் தோன்றின என Oparin ,Stanly Miller and Cyril Ponnamperuma போன்ற விஞ்ஞானிகள் கொள்கை அடிப்படையிலும் (Theory) பரிசோதனை (Experimental basis) அடிப்படையிலும் இரசாயன மூலக்கூற்றுக் கூர்ப்பு (Chemical and Molecular Evolution) என விளக்கியுள்ளனர்.
19) இதன் பிற்பாடு எளிமையான உயிர்கள் படிப்படியாக சிக்கலான உயிர்களாக கூர்ப்படைந்த முறைமை Charls Darwin தனது Origin of Species by Means of Natural Selection என்ற புகழ்பெற்ற கூர்ப்புக்கொள்கை மூலம் விளக்கியுள்ளார்.
20) இதனையே அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இருப்பு நிலையாகிய மூல ஆற்றல் தன்மாற்றம் (Self Transformation), இயல்பூக்கம் (Adaptation), கூர்தலறம் (Course and Effect) ஆகிய திறன்கள் மூலம் இப்பிரபஞ்சத்தின் அனைத்தும் தோற்றம் பெற்றன என விளக்கியுள்ளார்.
21) முடிவாக மூலப்பொருளின் - மெய்பொருளின் படிமுறை மாற்றமே அனைத்து முடிவுப்பொருட்களாகியுள்ளன. இதனையே வேதங்கள், வேதாந்தங்கள் (உபநிஷத்துக்கள்), பிரம்ம சூத்திரம் கூறி நிற்கின்றன. தூல சரீரம் (Physicsl Body), சூட்சும சரீரம் (shuttle/Astra) காரண சரீரம் (Casual body) ஆகிய மூன்றுக்கும் ஆதாரமாக மெய்ப்பொருளாகிய பிரம்மமே அறிவுநிலையில் (Conscious stage/ Wakening stage) உள்ளது.
22) மேலும் பகவத் கீதையின் சாராம்சமும் இதனையே கூறுகிறது. அதாவது எவனொருவன் எல்லாவற்றிலும் என்னைக் காண்கின்றானோ அவனை விட்டு நான் பிரிவதும் இல்லை என்னை விட்டு அவன் பிரிவதும் இல்லை என பகவான் கிருஸ்ணர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அடிப்படையில் விஞ்ஞானமும் ஆன்மிகமும் (Science and Sprituality) என்ற இந்த ஒரு சிறிய சிந்தனைப் பகுதி மிகவும் மேலோட்டமான ஒன்றாக தரப்பட்டுள்ளது. இதனை மேலும் மேலும் ஆராய்சிக்கு உட்படுத்தும் போது ஆன்மிகமும் விஞ்ஞானமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத இணைப்பு கொண்டுள்ளமையை புரிந்துகொள்வதுடன் ஆன்மிகம் சார்ந்தே நமது வாழ்க்கை ஒவ்வொரு நொடிப்பொழுதும் நகர்கின்ற தத்துவார்த்த உண்மைப் புரிதலுடன் வாழப்பழகிக் கொள்வோம் எனக் கூறி அருட்தந்தை தனது இந்த மெய்விளக்கத்தை ஒரு கவிதை மூலம் எளிமைப்படுத்திக் கூறியுள்ளார். அக்கவிதையைக் கூறி நிறைவு செய்கின்றேன்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
ஆதி எனும் பரம்பொருள் மெய் எழுச்சி பெற்று
அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
மோதி இணைந்து இயங்குகின்ற நிலைமைக்கேற்ப
மூலகங்கள் பலவாகி அவை இணைந்து
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பு இடை உணர்தல் இயக்கமாகி
நீதி நெறி உணர் மாந்தராகி வாழும் நிலை
உணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்
- Gnanasiriyar SKY Prof Mr A.Thangarajah
(B.Sc,Dip in Edu,M.A in YOGA for YHE, Barathyar University)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM