மொனராகலை, தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் 17 மாணவர்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இந்த மாணவி தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரொருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த மாணவன் இந்த மாணவியை ஏமாற்றி மற்றுமொரு மாணவனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, இந்த வீட்டிலிருந்த மாணவர்கள் சிலர் இந்த மாணவிக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதோடு அதனைக் காணொளிகளாக பதிவு செய்துள்ளனர்.
பின்னர், அந்த மாணவர்கள் காணொளிகளைக் காண்பித்து இந்த மாணவியை அச்சுறுத்தி சுமார் ஒரு வருட காலமாக 7 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் தெரியவந்துள்ள நிலையில் பாடசாலையின் பெயருக்கு இழிவு ஏற்படுவதால் அவர்கள் இதனை மறைக்க முயன்றுள்ளனர்.
இது தொடர்பில் தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM