ஹோட்டலின் மீது ஹெலிக்கொப்டர் விழுந்ததால் தீ விபத்து : அவுஸ்திரேலியாவில் சம்பவம்

12 Aug, 2024 | 09:08 AM
image

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் கெயர்ன்ஸ் நகரத்தின் ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் அதன் விமானி உயிரிழந்துள்ளார்.

ஹெலிக்கொப்டர் ஹோட்டலின் கூரைமீது விழுந்து நொருங்கியதை தொடர்ந்து பாரிய தீ மூண்டதாகவும், இதனை தொடர்ந்து ஹோட்டலில் காணப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெலிக்கொப்டரில் இருந்த ஒரேயொரு நபர் உயிரிழந்துள்ளார் என குயின்ஸ்லாந்து காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் அனுமதிக்கப்படாத பயணத்தை மேற்கொண்டார் என ஹெலிக்கொப்டரை பயணங்களிற்கு வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோட்டலில் காணப்பட்டவர்களில் 80 வயது ஆண் ஒருவரும் 70 வயது பெண்ணும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மழைபெய்துகொண்டிருந்த ஒரு நிலையில் ஹெலிக்கொப்டர் மிகவும் தாழ்வாக பறந்தது அதன் விளக்குகள் ஒளிரவில்லை  என ஹோட்டலில் காணப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பது போன்ற சத்தம் கேட்டது, அதன் பின்னர் தீ மூண்டது புகை எழுந்தது, ஹோட்டலில் இருந்த பலருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என ஹோட்டலின் நடவடிக்கைகளை மேற்பார்வைசெய்யும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின்...

2024-09-17 20:29:48
news-image

டெல்லியின் அடுத்த முதல்வராகிறார் அதிஷி: பெயரை...

2024-09-17 15:58:36
news-image

சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பின்னர் நாளை...

2024-09-17 11:43:12
news-image

டிரம்ப் கொலை முயற்சி - 12...

2024-09-17 10:40:52
news-image

நைஜீரியாவில் வெள்ளம் : சிறைச்சாலை சுவர்...

2024-09-17 11:03:16
news-image

புதுடெல்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ராஜினாமா:...

2024-09-17 10:12:24
news-image

ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்:...

2024-09-16 14:56:05
news-image

சீனாவின் ஷங்காயை தாக்கிய சூறாவளி ;...

2024-09-16 13:48:23
news-image

டிரம்பை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன்...

2024-09-16 11:47:32
news-image

உத்தரபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து...

2024-09-16 09:30:51
news-image

டிரம்பை கொல்வதற்கு மீண்டும் முயற்சி-சந்தேக நபர்...

2024-09-16 07:11:47
news-image

நைஜீரியாவில் படகு விபத்து - 64...

2024-09-15 12:49:20