அயர்லாந்துடனான மகளிர் ரி20 கிரிக்கெட்: ஹர்ஷிதா துடுப்பாட்டத்தில் அபாரம்; இலங்கைக்கு இலகு வெற்றி

Published By: Vishnu

12 Aug, 2024 | 12:25 AM
image

(நெவில் அன்தனி)

டப்ளின், செண்டிமவுன்ட், பெம்ப்ரோக் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இலங்கை - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

வழமையான அணித் தலைவி சமரி அத்தபத்து இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதால் இத் தொடருக்கு இலங்கை மகளிர் ரி20 அணியின் தலைவியாக அனுஷ்கா சஞ்சீவனி நியமிக்கப்பட்டார்.

ஹர்ஷிதா சமரவிக்ரம அதிரடியாகக் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதமும் விஷ்மி குணரட்னவுடன் அவர் இட்டுக்கொடுத்த சிறந்த ஆரம்பமும் இலங்கை மகளிர் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.

அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 146 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடர் இலங்கை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

விஷ்மி குணரட்னவும் ஹர்ஷிதா சமரவிக்ரமவும் 10 ஓவர்களில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

விஷ்மி குணரட்ன 30 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்த கவிஷா டில்ஹாரி வெறும் 9  ஓட்டங்களுடனும் அனுஷ்கா சஞ்சீவனி 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

எனினும் மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹர்ஷிதா சமரவிக்ரம 45 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் ஆட்டம் இழக்காமல் 86 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

கெபி லூயிஸ் (39), ஓரியா ப்ரெண்டர்காஸ் (29), அணித் தலைவி லோரா டிலேனி (25), ரெபெக்கா ஸ்டொக்கெல் (21), அமி ஹன்டர் (17) ஆகியோர் துடுப்பாட்டத்தில் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சில் இனோஷி ப்ரியதர்ஷனி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகி: ஹர்ஷிதா சமரவிக்ரம.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56