(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த வருடத்திற்கான பிரதான கழகங்களுக்கு (Major Club 50 Over Cricket) இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஏஸ் கெப்பிட்டல் கழகம் சம்பியன் பட்டத்தை சூடியது.
கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு (சிசிசி) எதிராக ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சம்மு அஷான் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதத்தின் உதவியுடன் 4 விக்கெட்களால் ஏஸ் கெப்பிட்டல் கழகம் வெற்றிபெற்று சம்பியனானது.
அப் போட்டியில் சிசிசியினால் நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏஸ் கெப்பிட்டல் கழகம் 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஏஸ் கெப்பிட்டல் கிரிக்கெட் கழகத்தின் முதல் இரண்டு வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.
எனினும் அணித் தலைவர் தனூக்க தாபரேயும் ரவீன் டி சில்வாவும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
தனூக்க 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ரவீன் டி சில்வாவும் சம்மு அஷானும் 4ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.
ரவீன் டி சில்வா 38 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து 25 ஓட்டங்களைப் பெற்ற சக்குன லியனகேவுடன் 5ஆவது விக்கெட்டில் மேலும் 56 ஓட்டங்களைப் சம்ம அஷான் பகிர்ந்தார்.
47 ஓவர்கள் நிறைவில் ஏஸ் கெப்பிட்டல் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆனால் அடுத்து களம் புகுந்த ரவிந்து ரட்நாயக்க அதிரடியாக 7 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களை விளாசி அசான் ஷம்முவுடன் இணைந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
வெற்றியை மாத்திரம் குறிவைத்து மிகுந்த நிதானத்துடன் துடுப்பபெடுத்தாடிய சம்மு அசான் 97 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் சொனால் தினுஷ 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இசுறு உதான 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிசிசி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.
இசுறு உதானவும் அணித் தலைவர் லக்ஷான் சந்தகானும் 9ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்ததாலேயே சிசிசி கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
இசுறு உதான மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 46 பந்துகளில் 7 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைக் குவித்தார்.
அவரைவிட லசித் குரூஸ்புள்ளே 33 ஓட்டங்களையும் அஞ்சல பண்டார 29 ஒட்டங்களையும் சோனால் தினுஷ 27 ஓட்டங்களையும் சமிந்து விஜேசிங்க 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வனுஜ சஹான் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நிம்சர அத்தரகல்ல 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்த சுற்றுப் போட்டியில் சம்பியன் ஏஸ் கெப்பிட்டல் கிரிக்கெட் கழகத்திற்கு 30 இலட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்ற சிசிசிக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
இதனை விட தொடர்நாயகன் தனூக்க தாபரேக்கு 15 இலட்சம் ரூபாவும் ஆட்டநாயகன் சம்மு அஷானுக்கு 750,000 ரூபாவும் சுற்றப் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் கிரிஷான் சஞ்சுலவுக்கும் சிறந்த பந்துவீச்சாளர் டில்ஷான் முனவீரவுக்கும் தலா 10 இலட்சம் ரூபாவும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM