ரொபட் அன்டனி
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்கள் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். தொடர்ந்து தேர்தல் பிரசாரங்கள் மிகத் தீவிரமாக நடைபெறும். அரசியல் கட்சி பிரதிநிதிகள் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.
அதன்படி, தற்போதே தேர்தல் காலம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. கூட்டணி அமைக்கும் செயற்பாடுகள், முகாம்களை உருவாக்குதல், ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரங்கள் என தேர்தல் களம் பரபரப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. தேர்தலை பொறுத்தவரை மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இது மக்களின் ஜனநாயக உரிமை. அந்த உரிமையை யாரும் விட்டுக் கொடுக்கக் கூடாது. 21 ஆம் திகதி மக்கள் சென்று வாக்களிக்க வேண்டும். போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.
அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க போகின்ற அந்த வேட்பாளரை சரியான முறையில் அடையாளம் கண்டு கொள்கைகளை ஆராய்ந்து ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் மக்கள் பங்கெடுப்பது அவசியம். தேர்தலை பொறுத்தவரையில் அது ஜனநாயகத்தின் முக்கிய கருவி என்பதால் அந்த ஜனநாயக உரிமையை மக்கள் பிரயோகிக்க வேண்டும். அந்த உரிமையை புறம்தள்ளி விடக்கூடாது.
வாக்காளர்களின் கவனத்திற்கு
தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்கள் முதலில் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர் இருக்கின்றதா என்பதை பரீட்சித்து பார்க்க வேண்டும். அதனை தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்துக்குள் பிரவேசித்து தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்வதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
விரைவில் வாக்காளர் அட்டைகள் மக்களின் வீடுகளை வந்துசேரும். தேர்தல் ஆணைக்குழுவும் தபால் திணைக்களமும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. அந்த வாக்காளர் அட்டையில் நீங்கள் வாக்களிக்க வேண்டிய இடம் போன்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
வாக்காளர் அட்டைகள்
தேர்தல் தினத்தன்று மக்கள் காலை வேளையிலே வாக்களிக்கும் நிலையத்துக்கு சென்று வாக்களிப்பது அவசியம். வாக்களிக்க செல்லும் போது நிச்சயமாக வாக்காளர் அட்டையை எடுத்துச் செல்வது வாக்களிப்பதற்கு இலகுவாக இருக்கும். அதேநேரம் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையுடன் மேலும் பல ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள அட்டைகள்
தேசியஅடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியானசாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர்களுக்காக சமூகசேவை திணைக்களம் வழங்குகின்ற அடையாள அட்டை, மதத் தலைவர்களுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை என்பனவற்றை பயன்படுத்தலாம். இவை எதுவுமே இல்லாவிடில் தேர்தல் திணைக்களத்திலிருந்து தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
மக்கள் கட்டாயமாக வாக்காளர் அட்டைகளையும் எடுத்து செல்வதுடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய அடையாள அட்டையையும் கொண்டு செல்வது அவசியமாகும். உங்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டை இல்லாவிடில் உங்களால் வாக்களிக்க முடியாது என்பதை கருத்தில் கொள்வது முக்கியம்.
வெற்றிபெறும் வேட்பாளர்
வாக்களிப்புகள் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படுவார். அளிக்கப்படுகின்ற வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் கழிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுகின்றவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார். ஒருவேளை எந்த வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளை பெறாவிடின் அதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
வாக்களிப்பது எவ்வாறு?
வாக்களிக்கும் போது மக்கள் மிகவும் கவனமாக வாக்களிக்க வேண்டும். வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களும் அவர்களது பெயர்களுக்கு முன்னே அவர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட சின்னமும் அதற்கு அருகில் பெட்டியும் இருக்கும். வாக்காளர் தனது விருப்ப தெரிவிற்கு ஏற்ப ஒருவேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். அவ்வாறு வாக்களிக்கும் போது 1 என்ற இலக்கத்தை பெட்டியில்இட்டுவாக்களிக்க வேண்டும்.
மேலும், மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் இருக்கும் பட்சத்தில் வாக்காளர் தனது இரண்டாந் தெரிவையும் மூன்றாந் தெரிவையும் வெளிப்படுத்தும் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு விருப்புவாக்குகளையும் ளிக்கலாம்.
அப்படியாயின் தனக்கு முதலாவது பிடித்த வேட்பாளருக்கு 1 என்ற இலக்கத்தில் வாக்களித்துவிட்டு இரண்டாவது பிடித்த வேட்பாளருக்கு 2 என்ற இலக்கத்தில் வாக்களிக்கலாம். மேலும் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாயின் முதலாவது பிடித்த வேட்பாளருக்கு 1 என்றும்இரண்டாவதுபிடித்தவேட்பாளருக்கு 2 என்றும் மூன்றாவது பிடித்த வேட்பாளருக்கு 3 என்றும் இலக்கத்தையிட்டு வாக்களிக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்றால் இலக்கங்களையே ( அரபுஇலக்கவரிசை) பயன்படுத்தவேண்டும். மாறாக முதலாவது பிடித்த வேட்பாளருக்கு புள்ளடியிட்டுவிட்டு இரண்டாவது பிடித்த வேட்பாளருக்கு இலக்கத்தை இட்டால் அந்தவாக்கு நிராகரிக்கப்படும். ஆனால் ஒருவருக்கு மட்டும் வாக்களிக்கவேண்டும் என்றால் 1 என்ற இலக்கத்தை இட்டு வாக்களிக்கலாம். ஒன்றுக்கு
மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்புவாக்கின் மூலம்வாக்களிக்க முற்பட்டால் 1, 2, 3 என்று இலக்கத்தைதான் பயன்படுத்தவேண்டும். இதுதான் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு முறையாகும்.
அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை தவிர வாக்குச்சீட்டில் வேறு எதனையும் குறிப்பிடக் கூடாது. அவ்வாறு குறிப்பிடும் பட்சத்தில் அவை நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பிரகடனப்படுத்தப்படும். எனவே வாக்காளர் தமது வாக்கை பயன்படுத்தும் போது துல்லியமாக வாக்களிக்க வேண்டும்.
எவரும் 50 வீதத்தை பெறாவிடின்?
மேலும் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை பெறாவிடின் என்ன நடக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையாளர் நாயகம் இவ்வாறு விளக்கமளிக்கிறார்.
‘’எவருக்கும் 50 வீதமான வாக்குகள் கிடைக்காவிடின் முதலாவது மற்றும் இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்ற வேட்பாளர்களை மாத்திரம் போட்டியில் வைத்துக் கொண்டு ஏனையவர்கள் பேட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.
அதற்கு அடுத்ததாக போட்டியிலிருந்து விலக்கப்படுகின்ற வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கின்ற வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை நாம் பார்ப்போம். உதாரணமாக மூன்றாவது அதிகூடிய வாக்குகளை பெற்றவேட்பாளருக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் முதலாவதுஅல்லதுஇரண்டாவதுஅதிகூடியவாக்குகளைப்பெற்றுள்ளவேட்பாளர்களுக்கு விருப்புவாக்குகள்அளிக்கப்பட்டிருந்தால்அதனைஅந்தவேட்பாளர்களின்வாக்குகளுடன்நாங்கள்இணைப்போம். உதாரணமாக ஏ,பி,சி, டி, ஆகியவேட்பாளர்கள்போட்டியிடுகின்றார்கள்என்றால்முதலாவதுவாக்குஎண்ணிக்கையில் ஏ மற்றும் பி ஆகிய வேட்பாளர்கள் அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் 50 வீத வாக்கை பெறவில்லைஎன்றால் அந்த ஏ மற்றும் பி பெற்ற வாக்குகளை ஒருபக்கம் வைத்துவிட்டு சி மற்றும் டி ஆகியோரின் வாக்களிப்பு சீட்டுகளை எடுத்து அதில் யாராவது ஏ மற்றும் பி வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை அளித்துள்ளனரா என்று பார்ப்போம். அவ்வாறு ஏ மற்றும் பி வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பின் அந்த வாக்கை ஏ மற்றும் பி வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளுடன் சேர்ப்போம்.
அவ்வாறு இணைத்த பின்னர் அவர்கள் இருவரும் பெற்ற வாக்குகளை மொத்த செல்லுபடியான வாக்குகளாக நாம் எடுப்போம். அதில் அதிகப்படியான வாக்குகளை பெற்றிருப்பவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். மூன்றாவது கூடிய வாக்குகளை பெற்றவரின் வாக்களிப்பு அட்டையில் 2 ஆவது விருப்பு வாக்கு முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருப்பவர்களுக்கு வழங்கப்படாமல் மூன்றாவது விருப்பு வாக்கு முதல் இரண்டு இடங்களில் இருக்கின்ற யாருக்காவது அளிக்கப்பட்டிருந்தால் அதனை உரியவருக்கு வழங்குவோம்.
இவ்வாறு இரண்டாவது வாக்கெண்ணல் செயற்பாட்டின் பின்னர் இருவரும் சமனான வாக்குகளை பெற்றிருந்தால்திருவுளச்சீட்டுமுறைபயன்படுத்தப்படும்.
ஜனநாயக உரிமையை பயன்படுத்த வேண்டும்
எனவே மக்கள் இவை தொடர்பான தெளிவை பெற்றுக்கொள்வது அவசியமாகிறது. வேட்பாளர்கள் முன்வைக்கின்ற கொள்கை பிரகடனங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மறுசீரமைப்புகள் தொடர்பான அவர்களது பரிந்துரைகள் என்பனவற்றை வாக்காளர்கள் கவனத்தில் கொள்வது அவசியம். அவற்றின் அடிப்படையிலேயே வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் வேட்பாளர்களின் கொள்கைகளை ஆராய்ந்து அவர்களது திட்டங்களை பரிசீலித்து தமது அடுத்த தலைவரை தெரிவு செய்ய வேண்டும். அதற்கு மக்கள் இந்த ஜனநாயக உரிமை பயன்படுத்துவது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM