கொத்மலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வட்டகொடை நகரில் நேற்று மாலை 7 மணி முதல் இது வரை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கொத்மலை பிராந்திய மின்சார சபை காரியாலயத்திற்கும் கண்டியில் அமைந்துள்ள மத்திய மாகாண தலைமை காரியாலயத்திற்கும் பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரை இன்று காலை வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும். வட்டகொட பிரதேசத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கும் இதுதொடர்பில் அறிவித்த போதிலும் அவர்களும் குறித்த மின் தடை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் இரவு முதல் அதிகாலை வரை வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றமையினால் அதில் நாம் முழுமையாக ஈடுபட முடியவில்லையெனவும் மின் தடை காரணமாக பல அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் மின் தடைக்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லையெனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM