மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பங்களாதேஸ் அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதிக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பங்களாதேசிலிருந்து தப்பிவெளியேறிய முன்னாள் பிரதமரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறைக்கு காரணமான பங்களாதேஸ் தலைவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படு;த்தவேண்டும் என அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் ஜனநாயக கட்சி உறுப்பினர் வன்கொலென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹசீனாவின் உள்துறை அமைச்சர் அசாதுஸமன் கான் ஹமால்,அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஒபைதுல் குவாடர் ஆகியோர் குறித்த அமெரிக்க செனெட்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தடைகளை விதிக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக அளவுக்கதிகமான படைபலத்தை பயன்படுத்தியது என மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதேவேளை முகமட் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்றுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM