டுபாய் நாட்டிலிருந்து ஒரு தொகை தங்கங்களை கடத்திவர முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு இலங்கைக்கு 10 கிலோ கிராம் தங்கத்தை குறித்த நபர் கடத்திவரமுற்பட்டவேளை கைதுசெய்துள்ளதாக விமான நிலையசுங்க அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கடத்திவரமுற்பட்ட தங்கத்தின் பெறுமதி 7 கோடி ரூபாவென தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் கைதுசெய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர் 37 வயதுடையவரெனவும் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேரந்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது.