நியூ ஸ்டார்ஸின் சவாலை முறியடித்து றினோன் கழகம் சம்பியனானது

11 Aug, 2024 | 07:38 PM
image

(நெவில் அன்தனி)

எட்டு கழகங்கள் பங்குபற்றிய கலம்போ - சிட்டி சவால் கிண்ண நொக் அவுட் கால்பந்தாட்டப் போட்டியில் கொட்டாஞ்சேனை றினோன் கழகம் சம்பியனானது.

சிட்டி லீக் மைதானத்தில் சனிக்கிழமை (10) பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூ ஸ்டார் கழகத்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இறுக்கமான வெற்றியை ஈட்டி கலம்போ - சிட்டி சவால் கிண்ணத்தை றினோன் கழகம் சுவீகரித்தது.

இறுதிப் போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்திய நினோன் கழகம் 15ஆவது நிமிடத்தில் கவிந்து இஷான் மூலமும் 21ஆவது நிமிடத்தில் எம்.என்.எம். பஸால் மூலமும் கோல்களைப் போட்டு இடைவேளையின்போது 2 - 0 என்;ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

ஆனால், இடைவேளையின் பின்னர் நியூ ஸ்டார் கழகம் திறமையாக விளையாடி கோல் போட எத்தனித்தது.

எவ்வாறாயினும் அதன் முயற்சிகளில் வீரர்கள் மாறி மாறி ஒவ் சைட் வலையில் சிக்கியதால் பலனளிக்காமல் போனது. அவற்றில் ஒரிரு சந்தர்ப்பங்களின் உதவி மத்தியஸ்தரின் தீர்ப்புகள் குறித்து நியூ ஸ்டார் வீரர்கள் கேள்வி எழுப்பினர்.

எவ்வாறாயினும், போட்டியின் உபாதையீடு நேரத்தில் எம். அனாஸ் மிகவும் அருமையான கோல் ஒன்றைப் போட்டு நியூ ஸ்டார் கழகத்திற்கு புத்துயிர் கொடுத்தார். அவர் கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் நகரைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரராவார்.

அவர் கோல் போட்டு சற்று நேரத்தில் ஆட்டம் முடிய றினோன் கழகம் சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.

சம்பியனான றினோன் அணிக்கு கலம்போ - சிட்டி சவால் கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன் வீரர்களுக்கு தங்கப் பதக்கங்கள் சூட்டப்பட்டன.

இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூ ஸ்டார் கழகத்திற்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் சூட்டப்பட்டன.

அத்துடன் போட்டியில் பங்குபற்றிய மற்றைய 6 கழகங்களுக்கு தலா 250,000 ரூபா வழங்கப்பட்டது.

கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் 112ஆவது வருட நிறைவை முன்னிட்டு இந்த அழைப்பு நொக்அவுட் கால்பந்தாட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழம்பு கால்பந்தாட்ட லீக்கின் உதவித் தலைவர்களில் ஒருவரும் செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவருமான அன்தனி மணிவன்னனின் முயற்சியாலும் திட்டமிடலாலும் இப் போட்டி வெகுசிறப்பாக நடத்தப்பட்டது.

கலம்போ - சிட்டி சவால் கிண்ண நொக் அவுட் காலப்நதாட்டப் போட்டிக்கு எக்ஸ்போ ப்ரொப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் பூரண அனுசரணை வழங்கியது.

அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கிரேஷியன் பெர்னாண்டோ விசேட அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56
news-image

இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ராகுல்,...

2024-09-10 14:11:46