ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம் - பிரசன்ன ரணதுங்க

10 Aug, 2024 | 08:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிப் பெறமாட்டார். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக உள்ளார்கள்.ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா பகுதியில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வியாபாரிகளை ஜனாதிபதியாக்க வேண்டாம் என்ற கோரிக்கையைப் பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டோம்.தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளர் என்று குறிப்பிட்டார்கள்.வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.நாமல் ராஜபக்ஷ அரசியலில் கற்றுக்கொள்வதற்கு இன்னும் பல விடயங்கள் உள்ளன.அவர் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது எமக்கு அன்பு உள்ளது,அதைக் காட்டிலும் நாட்டுப்பற்று உள்ளது.இதன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியும் என்று நாட்டு மக்கள் குறிப்பிடுகின்றன நிலையில் பொதுஜன பெரமுன மாத்திரம் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிப் பெறமாட்டார்.அதுவே உண்மை யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெறச் செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுப்போம்.நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்தனகலு ஓயா உட்பட சில இடங்களில்...

2024-10-13 13:48:06
news-image

உடல்நல பாதிப்பினால் தேர்தலில் போட்டியிடவில்லை என...

2024-10-13 13:06:03
news-image

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் ஒரு இலட்சம்...

2024-10-13 13:03:09
news-image

சீரற்ற காலநிலையால் இருவர் பலி; 76,218...

2024-10-13 12:46:23
news-image

கல்கிசையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-10-13 12:54:10
news-image

தேசிய கட்சிகளின் தேசியப் பட்டியல் வெளியீடு!

2024-10-13 13:12:23
news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29