அந்தகன் - திரை விமர்சனம்

10 Aug, 2024 | 04:49 PM
image

தயாரிப்பு : ஸ்டார் மூவிஸ்

நடிகர்கள் : பிரசாந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர்.

இயக்கம் : தியாகராஜன்

மதிப்பீடு : 2.5/5

டிகர் பிரசாந்த் - இன்றைய இளம் தலைமுறை சினிமா ரசிகர்கள் மறந்த நடிகர். அவர்களை கவரும் வகையிலான - இன்றைய ட்ரெண்டிங்கில் உள்ள டார்க் காமெடி க்ரைம் திரில்லர் ஜேனரில் ஒரு படத்தை ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா, இல்லையா என்பதை தொடர்ந்து காண்போம்.

பிரசாந்த் (க்ரீஷ்) பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி இசை கலைஞராக அறிமுகமாகிறார். இந்த பிரத்யேக அம்சத்தினால் அவருக்கு பிரியா ஆனந்தின் அறிமுகமும், நட்பும் கிடைக்கிறது. பிரசாந்தின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட பிரியா ஆனந்த் அவருடன் நெருக்கமாக பழகுகிறார். இந்தத் தருணத்தில் அவருடைய இசை திறமையை கண்டு திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் கார்த்திக்கின் நட்பும் பாராட்டும் கிடைக்கிறது.

கார்த்திக்கின் இளம் மனைவியான சிம்ரன், காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனியுடன் திருமணம் கடந்த உறவில் இருக்கிறார். அவர்களின் தகாத உறவினை கார்த்திக் நேரில் பார்க்கிறார். அந்த தருணத்தில் அந்த வீட்டில் பார்வைத்திறன் சவால் உள்ள இசை கலைஞராக பிரசாந்த் இருக்கிறார். ஆனால் அவரின் நடவடிக்கையில் பதட்டம் தெரிகிறது. அதன் பிறகு தான் பிரசாந்த் பார்வைத்திறன் சவால் உள்ளவராக நடிக்கிறார் என்றும்... இந்த பார்வைத் திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளியாக இருக்கும் போது தான் தன்னுடைய இசைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்ற ஒரு நியாயத்தை விளக்குகிறார்.

சிம்ரன்- சமுத்திரக்கனி இருவரும் இணைந்து கார்த்திக்கை கொலை செய்கிறார்கள். அந்தக் கொலையை திறமையாக மறைத்தும் விடுகிறார்கள். இந்த உண்மையை தெரிந்து கொண்ட பிரசாந்தை, சிம்ரன் தந்திரமாக செயல்பட்டு, அவருடைய பார்வைத் திறனை பறித்துவிடுகிறார்.

தற்போது அசலாகவே பார்வைத் திறனை இழந்த பிரசாந்த்தை சமுத்திரக்கனி தீர்த்து கட்ட திட்டமிடுகிறார். அவரது சதி திட்டத்தில் இருந்து பிரசாந்த் தன்னை காப்பாற்றிக் கொண்டாரா? இல்லையா? என்பதும் நடிகர் கார்த்திக்கை கொலை செய்த சிம்ரன் - சமுத்திரக்கனி ஆகிய இருவரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தினாரா, இல்லையா? என்பதும், அத்துடன்  இங்கிலாந்தில் வாழ வேண்டும் என்ற தன்னுடைய வாழ்க்கை லட்சியத்தை எப்படி நிறைவேற்றிக் கொண்டார்? என்பதும் தான் இப்படத்தின் கதை.

இந்தியில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் அயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'அந்தாதூன்' படத்தின் தமிழ் பதிப்பு தான் 'அந்தகன்' என்றாலும் ஹிந்தி திரைப்படத்தில் பார்வையாளர்களுக்கு கிடைத்த திரில்லிங்லான அனுபவம் இந்த படத்தில் மிஸ்ஸிங். இருந்தாலும் அந்தப் படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் புதுவித அனுபவத்தை வழங்கும். அதிலும் பிரசாந்தின் நடிப்பில் அந்தகன் திரைப்படம் பிரசாந்தை பற்றிய தோற்றத்தை மாற்றி இருப்பதால் ரசிக்க முடிகிறது. பிரசாந்த் இதற்கு முன் இது போன்ற எதிர்மறையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை. அந்த வகையில் இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிப்பது போல் அவரது கதாபாத்திரம் உள்ளதால் ரசிக்க முடிகிறது. ஆனால் அதற்கான நுட்பமான நடிப்பை வழங்குவதில் பிரசாந்த் தவறி இருக்கிறார்.‌

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இந்த உலகத்தில் அனைவரும் சுயநலவாதிகள் தான் என்பதை விவரிக்கும் வகையில் முழு திரைக்கதையும் திரையில் சொல்லப்பட்டிருந்தாலும்..‌ சுயநல கூட்டத்திற்கு இடையே சிக்கிய நல்லவர் (லீலா சாம்சன்)களின் நிலை தொடர்பான விவரணமும் கவனம் பெறுகிறது.

இந்தப் படத்தில் சிம்ரன் நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கிறது. அவருடைய அனுபவம் பல இடங்களில் உதவுகிறது. நடிகராகவே நடித்திருக்கும் நடிகர் கார்த்திக் தோன்றும் இடங்களில் அவருடைய வழக்கமான உற்சாகம் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.‌ மோசடி வைத்தியராக நடித்திருக்கும் கே. எஸ். ரவிக்குமார் வழக்கம்போல் நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

பியானோ வாசிக்கும் இசை கலைஞராக கதையின் முதன்மை கதாபாத்திரம் இருக்க... அதற்காக பியானோ இசையில் அற்புதத்தை நிகழ்த்த வேண்டிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்... மேஜிக்கை தவற விட்டிருக்கிறார். பாடல்களில் தான் அவருடைய இருப்பு மிஸ்ஸிங் என்றால்... பின்னணி இசையிலும் கோட்டை விட்டிருக்கிறார். பல காட்சிகளுக்கு வலிமையாக அமைந்திருக்க வேண்டிய பின்னணி இசை மிஸ்ஸிங்.

வணிக ரீதியிலான வெற்றி படத்தில் பிரசாந்த் இருக்க வேண்டும் என அவரும், இயக்குநரான தியாகராஜனும் விரும்பி இருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பம் நிறைவேறியிருக்கிறது.

அந்தகன் -‌ அசுர வீரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்'

2024-09-07 15:08:05
news-image

விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் முதல்...

2024-09-07 15:02:33
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' ஃபர்ஸ்ட்...

2024-09-07 14:47:15
news-image

திரையிசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மீசை...

2024-09-06 14:38:06
news-image

'தலைவெட்டியான் பாளையம்' புதிய நகைச்சுவை இணைய...

2024-09-06 13:16:44
news-image

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 'தேவரா பார்ட்...

2024-09-05 19:09:14
news-image

யோகி பாபு வெளியிட்ட 'ஜாலி ஓ...

2024-09-05 18:09:33
news-image

தி கிரேட்டஸ்ட் ஒஃப் ஆல் டைம்...

2024-09-05 17:59:12
news-image

புது பிக்பொஸ் விஜய் சேதுபதி 

2024-09-05 14:21:00
news-image

புதுமுக நடிகர் அத்வே நடிக்கும் 'சுப்ரமண்யா'...

2024-09-04 17:56:46
news-image

மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்' படத்தின்...

2024-09-04 17:53:06
news-image

அவல நகைச்சுவை படைப்பாக தயாராகும் 'நிர்வாகம்...

2024-09-04 17:50:39