அத்தனகலு ஓயாவில் ஆணொருவர் சடலமாக மீட்பு ; சந்தேக நபர்கள் கைது

10 Aug, 2024 | 04:45 PM
image

கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயாவில் கடந்த 5 ஆம் திகதி ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா பாலும்மஹர பகுதியைச் சேர்ந்த சுரங்க த சில்வா என்ற  40 வயதுடைய  திருமணமான நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

பாலும்மஹர மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 39 முதல் 46 வயதுக்குட்பட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் அத்தனகலு ஓயாவில் வீசப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்த மோட்டார் சைக்கிளை தேடும் பணியில் கடற்படையின் சுழியோடிகள் நேற்று வெள்ளிக்கிழமை (9) ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

தேங்காய் தட்டுப்பாடு ; அரசாங்க தலையீட்டை...

2025-01-22 12:10:23
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50
news-image

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

2025-01-22 10:50:43
news-image

ஜா - எலயில் கஜமுத்துக்களுடன் இருவர்...

2025-01-22 10:43:18
news-image

340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஏப்ரலில்...

2025-01-22 10:44:25