வெற்றி நடிக்கும் 'அதர்ம கதைகள்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

10 Aug, 2024 | 02:35 PM
image

நடிகர் வெற்றி கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'அதர்ம கதைகள்' எனும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தில் இடம்பெற்ற 'எனதுயிரே நீயடி..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இயக்குநர் காமராஜ் வேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'அதர்ம கதைகள்' எனும் திரைப்படத்தின் வெற்றி, சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி, சுனில் ரெட்டி, 'பூ' ராமு, வளவன், ஸ்ரீ தேவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே கே + எம். எஸ். பரணி + ராஜீவ் ராஜேந்திரன்+  ஜெஃபின் ரெஜினால்ட் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரெஹைனா + எஸ் என் அருணகிரி + ஹரிஷ் அர்ஜுன்+  சரண் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஆந்தாலஜி பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிக் பாங்க் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் காமராஜ் வேல் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'எனதுயிரே நீயடி உனக்கெனவே நானடி..' என தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. சரண் குமார் இசையில் வெளியான இந்த பாடலை பாடலாசிரியர் சீர்காழி சிற்பி எழுத, பின்னணி பாடகர் விஷ்ணு ராம் மற்றும் பின்னணி பாடகி அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். வழக்கமான பாடல் வரிகள் என்றாலும், பின்னணி பாடகர்களின் வசீகரமான குரலும், சரண் குமாரின் மயக்கும் இசையும் இந்த பாடலை கேட்க வைக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்