பிரேசிலின் சாவ்பவ்லோ நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை நேரில் பார்த்தவர்கள் அது குறித்து பிபிசிக்கு விபரித்துள்ளனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த 61 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விமானம் விழும் சத்தம் கேட்டதும் நான் ஜன்னலிற்கு வெளியே பார்த்தேன் அதுவிழுந்து நொருங்கிய தருணத்தை பார்த்தேன் என பெலிப்பே மகல்ஹேஸ் என்பவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது என பார்ப்பதற்காக விமானம் விழுந்த இடத்தை பார்ப்பதற்காக வின்கெடொ நகரத்தில் உள்ள எனது வீட்டிலிருந்து வெளியே ஓடிச்சென்றேன் அச்சமடைந்து என்ன செய்வதென தெரியாமல் மதில்மேலால் எறிப்பாய்ந்து சென்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்து நொருங்கிய நகரத்திற்கு அருகில் வசிக்கும் நெதலி சிகாரி தான் மதிய உணவுஉண்ணும்வேளை அருகில் பாரிய சத்தங்கள் கேட்டன என தெரிவித்துள்ளார்.
அது ஆளில்லா விமானத்தின் சத்தம் போல காணப்பட்டது அதனை விட பெரிய சத்தம் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் பல்கனிக்கு சென்றுகொண்டிருந்தவேளை விமானம் சுழன்றுகொண்டிருந்தது என அவர் பிரேசில் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
ஒரிருசெகன்ட்களில் நான் வழமையான சத்தம் இல்லை என்பதை உணர்ந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது விழுந்த தருணம் மிகவும் பயங்கரமானது,என அவர் தெரிவித்துள்ளார். எனது வீடு கடும் புகைமண்டலத்தால் சூழப்பட்டதால் நாங்கள் அங்கிருந்து பொருட்களுடன் வெளியேறவேண்டிய நிலையேற்பட்டது நான் காயமடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பியட்ரோ என்பவர் பலர் வீடியோ எடுக்க முயன்றதை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
நான் விமானத்தின் சிதைவுகளை பார்த்தேன் கபின் பகுதி மாத்திரமே மிஞ்சியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட விமானம் பிரேசிலின் தென்பகுதி நகரமான பரனாவில் உள்ள கஸ்கவெல் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.வூபாஸ் தவறவிட்ட சிலர் தங்களின் உணர்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
நான் அந்த விமானநிலையத்திற்கு சென்றவேளை அதிகாரிகள் ஊழியர்கள் எவரும் இருக்கவில்லை இறுதியாக ஒருவர் வந்து நான் விமானத்தில் ஏற முடியாது என தெரிவித்தார் என அட்ரியானோ அசிஸ் என்ற பயணி தெரிவித்துள்ளார்.
நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் ஆனால் எனது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM