அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளத்திற்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையே அமைந்துள்ள அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (09)மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நெல் அறுவடை முன்னாயத்த பணியில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று சடுதியாக பிரதான வீதியை நோக்கி இரு வழி சாலையை மறித்து திரும்ப முற்பட்ட வேளை மறுமுனையில் இருந்து வேகமாக பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி காலில் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு கை உடைந்துள்ளதாக விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் இவ்விபத்து தொடர்பில் நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM