பெண்களின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் குழந்தைகளின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை ஈராக் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது இளம் பெண்களின் கல்வி, உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது வரை ஈராக்கில் திருமணம் செய்ய குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈராக் நீதி அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட புதிய சட்டம், குடும்ப விஷயங்களுக்கு மத விதிகளை பின்பற்றலாமா அல்லது சிவில் நீதிமன்ற முறையை பின்பற்றலாமா என்பதை மக்கள் தெரிவு செய்ய அனுமதிக்கும்.
சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒன்பது வயதுடைய சிறுமிகளுக்கும், 15 வயதுடைய ஆண் சிறுவர்களும் திருமணம் செய்துகொள்ளலாம்.
சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என ஐநாவின் சிறுவர் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போதய இந்த வயது தளர்வு சட்டமூலத்துக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM