திருகோணமலை – திரியாய் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை

Published By: Vishnu

10 Aug, 2024 | 12:42 PM
image

திருகோணமலை – திரியாய் பகுதியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (09) திரியாய் வரத விக்னேஸ்வரர்  ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

1985ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் திகதி திரியாய் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை மக்களின் போக்குவரத்திற்காக ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச் சென்று கஜுவத்த என்னும் இடத்தில் வைத்து அவர்கள் அணிந்திருந்த மேற்சட்டையை கழட்டி அவர்களது கைகளை கட்டி ஓடவிட்டு சுட்டு படுகொலை செய்திருந்தார்கள் எனவும், 1985 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்முறை உச்ச கட்டம் அடைந்திருந்த நிலையில் ஆடி மாதம் 5ஆம் திகதி திரியாய் கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகளும், சிவில் உடை தரித்த காடையர்களும் திரியாய் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியதுடன் சொத்துக்களையும் தீக்கிரையாக்கி அழித்தார்கள்.

இந்நிலையில் திரியாய் கிராம மக்கள் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியதுடன் ஏனையோர் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில்; அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தார்கள். இவர்கள் மீதே இவ் வன்முறை சம்பவம் இடம்பெற்றிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00
news-image

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள்...

2025-03-14 12:47:34
news-image

CEMS-Global USA நிறுவனத்தின் நெசவுக்கண்காட்சி

2025-03-13 20:04:48
news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75...

2025-03-13 17:11:30
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் வருடாந்த புத்தகக்...

2025-03-13 16:53:38