நுவரெலியாவில் மட்டக்குதிரை சவாரி சென்ற வெளிநாட்டுப் பிரஜை தவறி விழுந்து வைத்தியசாலையில்

Published By: Vishnu

09 Aug, 2024 | 06:48 PM
image

நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் மட்டக்குதிரை சவாரி செய்து கொண்டிருந்த இத்தாலியப் பிரஜை ஒருவர் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 16 பேர் கொண்ட குழுவினருடன் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் பல இடங்களையும் சுற்றிப்பார்த்த நிலையில் வெள்ளிக்கிழமை நுவரெலியா நகரசபை மைதானத்திற்கு அருகில் மட்டக்குதிரை சவாரியில் ஈடுபடும் போது 16 வயதுடைய பெண் சவாரி செய்த மட்டக்குதிரை திடீரென முரட்டுத்தனமாக வேகமாகச் சென்றதில் தவறி விழுந்து விலா எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நுவரெலியாவிற்கு சுற்றுலாவிற்கு வருபவர்கள் மட்டக்குதிரை சவாரி செய்யும்போது பாதுகாப்பு  தலைக்கவசம் அணியாததும் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவதற்குக்  காரணமாக அமைகிறது என்றும் இதுபோன்று மட்டக்குதிரையிலிருந்து தவறிவிழுவது இது முதல்முறையல்ல என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இந்த சம்பவங்களுக்கு எதிர் வரும் காலங்களில்  முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க...

2024-09-16 17:55:58
news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2024-09-16 17:59:05
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல்...

2024-09-16 18:02:25
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன்...

2024-09-16 18:06:37
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52
news-image

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

2024-09-16 15:25:21