யாழ்ப்பாணம் சாட்டிக் கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளம் குடும்பஸ்தரொருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் பத்துக்கும்மேற்பட்ட தனது நண்பர்களுடன் வாகனம் ஒன்றில் சாட்டிக் கடலில் நீராடியுள்ளார்.

ஏனைய நண்பர்கள் கடலில் குளித்துவிட்டு கரைக்கு வந்த பின்னர் தம்முடன் கூட வந்த நண்பரைக் காணவில்லையென தேடிய நிலையில் அவருடைய சடலம் கடலில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்குத்தொருவைச் சோ்ந்த ஜோன் பொஸ்கோ ஸ்ரீதரன் வயது 44 என்பவரே கடலில் மூழ்கி உயிரிழந்தவராவார்.

 சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டுவரப்பட்ட போதிலும் உடலில் இருந்து உயிர் பிரிந்த நிலையில் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.