அறிமுக நடிகர் வினோத் மோகன் கதையின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் 'மாயன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஜெ. ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மாயன்' எனும் திரைப்படத்தில் வினோத் மோகன், பிந்து மாதவி, பிரியங்கா மோகன், பியா பாஜ்பாய், ஜான் விஜய் , 'ஆடுகளம்' நரேன் , சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஸ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், கே. கே. மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி திருடர் ஜேனரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபாக்ஸ் & க்ரோ ஸ்டுடியோஸ் மற்றும் ஜி வி கே எம் எலிபன்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அதாவது கிராபிக்ஸ் காட்சிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் இப்படத்தின் வெளியீட்டு திகதியை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி அன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியாகிறது.
புதுமுக நடிகர்+ தொழில்நுட்ப கலைஞர்கள்+ இன்றைய இளம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் ஆன்மீக விடயங்கள் + வி எஃப் எக்ஸ் கட்சிகள் + பிரம்மாண்டமான காட்சி அமைப்பு + என பல்வேறு அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் 'மாயன்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM