அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடா முயற்சி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் அஜித் குமாரின் தோற்றம். அதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுனின் கதாபாத்திரத் தோற்றம் ஆகியவற்றை வெளியிட்ட படக் குழு தற்போது இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆரவ்வின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ளது.
'விடாமுயற்சி' படத்தைப் பற்றிய புதிய தகவல் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருவதால் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இதனிடையே நடிகர் அஜித்குமார் 'விடா முயற்சி' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தவுடன் ஓய்வு எடுக்காமல் தொடர்ச்சியாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றுகிறார் என்பதும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என படக் குழுவினர் தெரிவித்திருப்பதாலும் இப்படத்தை பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM