சிறுபான்மையினர் பாதுகாப்பு: இந்திய - வங்கதேச எல்லை நிலவர கண்காணிப்புக்கு குழு அமைத்தது மத்திய அரசு!

09 Aug, 2024 | 05:01 PM
image

இந்திய - வங்கதேச எல்லையில் தற்போதைய நிலவரத்தை கண்காணிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக  இந்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்திய - வங்கதேச எல்லையில் (Indo - Bangladesh Border) தற்போதைய நிலைமையை கண்காணிக்க மோடி அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமக்கள், இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்நாட்டில் உள்ள தங்களுக்கு இணையான அதிகாரிகளுடன் இந்தக் குழு தொடர்புகளை மேற்கொள்ளும். இந்தக் குழுவுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் கிழக்கு மண்டல ஏடிஜி (ADG) தலைமை தாங்குவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்து தஞ்சம் அடைந்ததை அடுத்து, அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள சிறைகளில் இருந்து பயங்கரவாதிகள் உட்பட 1,200 கைதிகள் தப்பியோடி, இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிசெய்யலாம்  என்று எல்லைப் பாதுகாப்புப் படைக்கு பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

4,096 கிமீ நீளமுள்ள இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் இரவு நேரங்களில் எல்லைப் பகுதிகளில் தேவையற்ற நடமாட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று எல்லைப் பாதுகாப்புப் படை கேட்டுக் கொண்டுள்ளது. எல்லையில் உள்ள கடைகளை இரவு 9 மணிக்குள் மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பாக அரசு கண்காணித்து வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றதை அடுத்து முகம்மது யூனுஸ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், "புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள பேராசிரியர் முகம்மது யூனுஸுக்கு எனது நல்வாழ்த்துகள். பாதுகாப்பை உறுதிசெய்து, இயல்பு நிலை விரைவில் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும், இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என நம்புகிறோம். அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நமது இரு நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் குற்றச்சாட்டு : பிரேசில் மனித...

2024-09-07 13:44:57
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க...

2024-09-07 09:48:04
news-image

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி...

2024-09-07 09:27:53
news-image

கென்யாவில் பாடசாலையில் தீ விபத்து ;...

2024-09-06 13:37:54
news-image

தென் சீனாவை நோக்கி நகரும் யாகி...

2024-09-06 10:26:35
news-image

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக...

2024-09-05 16:25:51
news-image

ஜேர்மனியில் முனிச் நகரத்தில் இஸ்ரேலிய துணை...

2024-09-05 17:00:20
news-image

கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம்...

2024-09-05 11:02:38
news-image

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு...

2024-09-05 06:26:56
news-image

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய...

2024-09-04 16:33:57
news-image

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு...

2024-09-04 12:19:41
news-image

பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி...

2024-09-04 10:31:05