தயாரிப்பு : ஸ்டேஜ் அன்ரியல் பிரைவேட் லிமிடெட் & பேபி ஷு புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : கௌரவ் காளை, எஸ்தர் அனில், பிரவீண் கிஷோர் மற்றும் பலர்
இயக்கம் : ஹலீதா ஷமீம்
மதிப்பீடு : 2.5/5
'பூவரசம் பீபீ', 'சில்லு கருப்பட்டி', 'ஏலே' ஆகிய படைப்புகள் மூலம் திரை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த படைப்பாளி ஹலிதா ஷமிம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மின்மினி'. படத்தில் நடித்த நடிகர்கள் அசலாக பருவம் எய்தும் வரை (2015-2022 ) காத்திருந்து நிஜமான பீரியட் ஃபிலிமாக அவர்களை நடிக்க வைத்திருக்கும் இயக்குநரின் புதிய முயற்சி ரசிகர்களால் வரவேற்கப்பட்டதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் மலை வாசஸ்தலங்களில் ஒன்றான ஊட்டியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கிறார் கௌரவ் காளை. கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்த மாணவனாக திகழும் கௌரவ் காளை அந்த வயதிற்கு உரிய சக மாணவர்களை ஆதிக்கம் செலுத்தும் குணத்துடன் செயல்படுகிறார்.
இந்த தருணத்தில் அந்த பாடசாலைக்கு புதிய மாணவராக வருகை தருகிறார் பிரவீண் கிஷோர். இவர் அமைதியானவர் மற்றும் சதுரங்கம் விளையாடும் வீரரும் கூட. இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனால் இருவரும் மனதளவில் நட்பு பாராட்ட வேண்டும் என நினைத்தாலும் சந்தர்ப்ப சூழலால் செயல் வடிவம் பெறவில்லை.
இந்தத் தருணத்தில் பாடசாலையில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் சுற்றுலாவிற்கு செல்கிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. பிரவீணை காப்பாற்றி விட்டு கௌரவ் மரணம் அடைகிறார். தன் உயிரை காப்பாற்றிய நண்பரிடம் நட்பு பாராட்ட முடியவில்லை என்ற குற்ற உணர்வுக்கு பிரவீண் ஆளாகிறான்.
பிரவீண் மனதளவில் தவித்துக் கொண்டிருக்கும் போது அதே பாடசாலையில் எஸ்தர் அனில் சேர்கிறார். அவர் கௌரவ் காளையின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார். இதன் காரணமாக பிரவீணை பின் தொடர்கிறார். விபத்தில் மரணம் அடைந்த கௌரவ் காளை அளித்த உடல் உறுப்பு தானம் மூலம் வாழ்க்கையை பெற்றுக் கொண்ட எஸ்தர் பிரவீணின் மனதையும் அறிகிறார். அதன் பிறகு இருவரும் இணைந்து பயணித்து தங்களின் மன பாரத்தை இறக்கி வைத்தார்களா? இல்லையா? அதற்காக அவர் கடைப்பிடித்த வழி என்ன? இதை விவரிப்பது தான் 'மின்மினி' படத்தின் கதை.
முதல் பகுதியில் பாடசாலை -மாணவர்கள் -ஆசிரியர்- வகுப்பறை- சுற்றுலா -விபத்து- என வழக்கமான வரிசையிலும், பாணியிலும் காட்சிகள் நகர்வதால் ரசிகர்களிடத்தில் சோர்வை தான் பார்க்க முடிகிறது.
ஆனால் இரண்டாம் பாதியில் பிரவீணும் , எஸ்தரும் மேற்கொள்ளும் துவி சக்கர வாகன பயணம் அழகான நிலவியல் காட்சிகளாலும் பசுமையான இமயமலை பள்ளத்தாக்குகளாலும் அங்கு வாழும் மக்களின் அசலான இயல்பான வாழ்வியலாலும் காட்சி வழியாக ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்கள். இதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்கள்.
மன அழுத்தம் அல்லது மன உளைச்சலை குறைப்பதற்கு பயணம் ஒரு சிறந்த நிவாரணம் என்றாலும் இளம் வயதில் தனியாக ஆபத்தான மலைப்பகுதிகளில் சாகச பயணத்தை மேற்கொண்டால் மனம் புத்துணர்ச்சி அடைந்து விடும் என வலியுறுத்துவதை தான் முழு மனதாக ஏற்க இயலவில்லை.
இருப்பினும் இத்தகைய ஒரு முயற்சியை அந்த கதாபாத்திரம் மேற்கொள்வதன் மூலமாக தற்காலிகமான நிவாரணம் கிடைக்கும் என இயக்குநர் நம்பியதை பாராட்டலாம். மேலும் இதனூடாக பார்வையாளர்களுக்கு இயற்கையின் விவரிக்க முடியாத அழகை காட்சி மொழியாக விவரித்திருப்பதை பாராட்டியேயாக வேண்டும்.
நடிகர்கள் புது முகமாக இருந்தாலும் இயல்பான நடிப்பால் பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதால் நடிகை எஸ்தர் அனிலின் நடிப்பில் பக்குவம் தெரிகிறது. அனுபவமும் பளிச்சிடுகிறது. உடல் உறுப்பு தானம் மூலம் வாழ்க்கையை பெற்றிருந்தாலும் அதற்காக தன்னந்தனியே இமயமலையில் துவி சக்கர பயணம் மேற்கொள்வதெல்லாம் மிகை கற்பனை.
பாடசாலையில் மாணவர்களுக்கு இடையே மோதல் நடைபெறுகிறது என்றால். மாணவர்கள் ஒருபோதும் அதனை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதில்லை. அதனை அவர்களே தங்களுக்கு தெரிந்த பாணியில் எதிர்கொள்வார்கள். இதுதான் அந்த வயதிலுள்ள மாணவர்களின் உளவியல் நிலை. ஆனால் இயக்குநர் பெண்மணி என்பதால் மாணவர்களின் இடையேயான நுட்பமான இந்த உளவியலை நட்பு சார்ந்த அரசியல் மயமாக்கி அதனூடாக ஒரு கதையை விவரித்திருக்கிறார். அதனால் இந்தத் திரைப்படம் ஒரு பிரிவினருக்கு சோர்வை ஏற்படுகிறது.
இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஏ. ஆர். ரஹ்மானின் வாரிசான கதீஜா ரகுமான்- தந்தை அறிமுகமான படத்தில் ஏற்படுத்திய அதிர்வை போல் இவர் உண்டாக்கவில்லை என்றாலும் தனக்கும் இசை ஞானம் இருக்கிறது என்பதனை பல காட்சிகளில் நிரூபித்திருக்கிறார். இதனால் இவரது வரவு நல்வரவாக வேண்டும் என வாழ்த்தலாம்.
இந்தத் திரைப்படத்தில் ஏற்கனவே மேலத்தேய நாடுகளில் வெளியான Before Sunrise & Before Sunset - Boyhood போன்ற திரைப்படங்களின் தாக்கம் இருந்தாலும் இதனை நேர்த்தியான படைப்பாக தமிழில் வழங்கியதால் இயக்குநரை பாராட்டலாம்.
வணிகரீதியான அம்சங்கள் இல்லாத படம் என்றாலும் முழுமையான கலை படைப்பு அல்ல என்பதால் இன்றைய இளம் தலைமுறையினரின் ரசனை மாற்றத்தினால் இப்படம் வரவேற்பை பெறும்.
மின்மினி - குறைவான வெளிச்சம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM