(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.ஆகவே மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது.ரமேஷ் பத்திரன,காஞ்சன,செஹான்,தென்னகோன் ஆகியோர் ராஜபக்ஷர்களை விட்டு விலகியது சிறந்தது.மகிழ்ச்சியடைகிறேன் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கு கூற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.ஆகவே மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்ஷர்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்களின் அரசியலுக்காகவே பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டது.
அங்கு திறமையானவர்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை கிடையாது.இளம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரன , காஞ்சன விஜேசேகர செஹான், சேமசிங்க, பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோர் உட்பட சிறந்தவர்கள் ராஜபக்ஷர்களை விட்டு விலகியுள்ளமை வரவேற்கத்தக்கது.
2022 ஆம் ஆண்டு எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையின் போது ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் என்னை சந்தித்து .
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார். அப்போது வலையில் சிக்கிய புலியை பரிதாபப்பட்டு காப்பாற்றிய குரங்கை அடித்து கொன்று இரையாக்கிய புலியின் கதையை குறிப்பிட்டேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இன்று இதே கதிதான் நேர்ந்துள்ளது.தன்னை பாதுகாத்த ஜனாதிபதி மீதே ராஜபக்ஷர்கள் பாய்ந்துள்ளார்கள்.
தமது தேவை நிறைவடைந்தவுடன் எவராக இருந்தாலும் ராஜபக்ஷர்கள் அவர்களை தூக்கி எறிவார்கள்.2014 ஆம் ஆண்டு நான் அதை ஒரு படிப்பினையாக கற்றுக்கொண்டேன்.
பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பல பில்லியன் ரூபாவை செலவு செய்து இந்த படிப்பினையை 2024 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டுள்ளார்.ராஜபக்ஷர்கள் தமது குடும்ப நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படுவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM