ஜப்பானில் பாரிய பூகம்பம் குறித்து அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை கியூஷுதீவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வெள்ளிக்கிழமை கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் மங்கோலியாவுக்கான நான்கு நாட்கள் பயணத்தை இரத்து செய்துள்ளார்.
கிழக்கு ஜப்பானில் உள்ள பரந்த நன்ங்காய் பள்ளத்தாக்கிலிருந்து எதிர்காலத்தில் ஒரு பாரிய பூகம்பம் உருவாகலாம் என ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் ஒரு பெரிய அளவிலான பூகம்பம் ஏற்பட்டால், வலுவான அதிர்வு மற்றும் பாரிய சுனாமி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு ஜப்பானில் வியாழனன்று அதிகாலை 7.1 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது, மேலும், வெள்ளிக்கிழமை வரை அப்பகுதியை மேலும் அதிர்வுகள் தாக்கின. அப்பகுதிகளில் நில அதிர்வு செயல்பாடு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
டோக்கியோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தெற்கு ஒகினாவா மாகாணம் வரை பரவியுள்ள பிராந்தியத்தில் உள்ள நகராட்சிகள் தங்கள் பூகம்பத் தயார்நிலையைச் சரிபார்க்க வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.
தளபாடங்கள் விழாத வகையில் பாதுகாப்பாக வைக்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள சுருகா விரிகுடாவிற்கும் கியுஷூவிற்கு அப்பால் உள்ள ஹியுகனாடா கடலுக்கும் இடையே உள்ள தகடு எல்லையில் நன்ங்காய் பள்ளத்தாக்கில் பூகம்பம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அடுத்த மூன்று தசாப்தங்களுக்குள் அது தாக்குவதற்கு 70 முதல் 80 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகவும், 8 முதல் 9 வரையிலான ரிச்டர் அளவில் இருக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
மோசமான சூழ்நிலையில் 230,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதோடு, சுமார் 20 இலட்சம் கட்டிடங்கள் சேதமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM