இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (இ.பி.ப.ஆ.) கொழும்பு பங்குப் பரிவர்த்தனையுடன் (கொ.ப.ப.) கூட்டிணைந்து சமீபத்தில் கிரான்ட் நவ்ரோ ஹோட்டல், மாத்தறையில் ஒரு முதலீட்டாளர் கருத்துக்களத்தினை நடாத்தியது.
இக்கருத்துக்களமானது பங்குச் சந்தையில் கிடைக்கப்பெறுகின்ற முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு தொடர்பில் முதலீட்டாளர் கல்வியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி விழிப்புணர்வினை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒழுங்குசெய்யப்பட்டது.
இக்களமானது 200 இற்கும் அதிகமான பங்குபற்றுநர்களை கவர்ந்ததுடன் பிராந்தியத்திலுள்ள சாத்தியமான மற்றும் நடைமுறையிலுள்ள முதலீட்டாளர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவினை வழங்கியது.
இக்கருத்துக் களத்தில், கொ.ப.ப. மாத்தறை கிளையின் நிறைவேற்று அதிகாரி, திரு. பிமல் கணேசா சமூகமளித்தோருக்கு முதலீடு செய்வதன் செயன்முறை மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் நன்மை தீமைகள் உள்ளடங்கலாக முதலீடு செய்வதிலான ஒரு அறிமுகத்தினை வழங்கினார்.
இ.பி.ப.ஆ. இன் வெளிவாரி உறவுகள் முகாமையாளர் நிமால் குமாரசிங்க, அவையோருக்கு சந்தையில் இ.பி.ப.ஆ. இன் பங்கு என்ன என்பதில் முதலீட்டாளர்களை அறிவூட்டியதுடன், முதலீட்டாளர் பாதுகாப்பின் நுணுக்கங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.
அடுத்ததாக, கொ.ப.ப. இன் மொபைல் செயலியில் ஒரு விழிப்புணர்வினை உருவாக்குவதற்காக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் டிஜிட்டல் கருவிகள் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி ஷானிகா ராமநாயக்க அவர்கள் ஒரு அமர்வினை நடாத்தினார்.
மேலும், துடீ செக்கியுரிட்டீஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் பிரதம முதலீட்டு அதிகாரி, சஷிக விக்கிரமரத்ன துறைசார் செயற்திறனில் ஒரு பகுப்பாய்வினையும் சந்தை வாய்ப்புக்களையும் முன்னிலைப்படுத்தினார்.
NDB வெல்த் இன் தனிப்பட்ட செல்வ முகாமைத்துவத்தின் முகாமையாளர், தசக்க சமரவீர அவர்கள் அவையோருக்கு யுனிட் ட்ரஸ்ட் முதலீட்டிற்கான அறிமுகத்தினை எடுத்துக்கூறினார்.
கருத்துக்களத்தின் நிறைவாக, நிமால் குமாரசிங்க, சஷிக விக்கிரமரத்ன மற்றும் கொ.ப.ப. இன் சிரேஷ்ட துணைத் தலைவர் சந்தைப்படுத்தல், திரு. நிரோஷன் விஜேசுந்தர ஆகியோரது பங்குபற்றலுடன் ஒரு குழுக் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இது குழு உறுப்பினர்களிடமிருந்து ஏதேனும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பினை பங்குபற்றியோருக்கு வழங்கியது.
பங்குபற்றுநர்களுக்கு பங்குத் தரகு நிறுவனங்களின் முதலீட்டு ஆலோசகர்களையும் யுனிட் ட்ரஸ்ட் முகாமைத்துவக் கம்பனிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.
நிதியியல் கல்வியறிவின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டும்வேளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை உருவாக்குவதற்காக இ.பி.ப.ஆ. மற்றும் கொ.ப.ப. ஒருங்கிணைந்து 2024 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அம்பலாந்தொட்ட ஆகிய இடங்களில் முதலீட்டாளர் கருத்துக்களங்களை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM