(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
எமது நாட்டில் தனியார் துறைகளில் இலட்சக்கணக்கான மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் தொழில் பாதுகாப்பு, உழைப்புக்கு ஏற்ற சம்பளம் தொடர்பில் முறையான தேசிய கொள்கை அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சேவை பாதுகாப்பு தன்மை, காப்புறுதி மற்றும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய போதுமான சம்பளம் தொடர்பில் தெளிவான முறைமை ஒன்று நாட்டின் சட்ட கட்டமைப்பில் இல்லை.
வருமான வரி திருத்தப் பிரச்சினை, நுகர்வோர் செலவு தொடர்பான அழுத்தம், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முறைமை, தொழில் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தனியார் துறை ஊழியர்கள் முகம்கொடுத்து வருகின்றனர். பால் இன சமத்துவம் உள்ளிட்ட முகம்கொடுத்துவரும் சவால்களுக்கு நாட்டில் தேசிய தொழில் கொள்கை ஒன்று இருக்க வேண்டும்.
குறிப்பாக, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவை செய்துவரும் எமது மக்களின் தொழில் உரிமை, பாதுகாப்பு , மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனால் தேசிய தொழில் பாதுகாப்பு கொள்கை ஒன்றை முன்வைத்து தனியார் துறையில் இருக்கும் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM