(நெவில் அன்தனி)
ஏழு வகையான அணி நிலை விளையாட்டுப் போட்டிகளைக் கொண்ட 'இலங்கை விளையாட்டுத் திருவிழா 2024' (Sri Lanka Sports Fiesta 2024) கொழும்பை அலங்கரிக்கவுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்த விளையாட்டுத் திருவிழா கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மற்றும் அதனை அண்மித்த மைதானங்களில் எதிர்வரும் 16ஆம், 17ஆம், 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இவ் விளையாட்டு விழாவில் அணிக்கு மூவர் கூடைப்பந்தாட்டம், ரி10 கிரிக்கெட், அணிக்கு ஐவர் கால்பந்தாட்டம், அணிக்கு எழுவர் ஹொக்கி, வலைந்தாட்டம், அணிக்கு எழுவர் றக்பி, ஜனாதிபதி கிண்ண கரப்பந்தாட்டம் ஆகிய 7 வகையான அணி நிலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப் போட்டிகளில் 1544 வீர, வீராங்கனைகளும் 1520 இளைஞர், யுவதிகளுமாக மொத்தம் 3064 பேர் பங்குபற்றவுள்ளனர்.
இவ் விளையாட்டு விழாவுக்கான பிரதான அனுசரணையை டயலொக் ஆசிஆட்டா குழுமம் வழங்குவதுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் இரண்டு கோடி ரூபாவை அனுசரணைத் தொகையாக வழங்கியுள்ளது. இன்னும் சில நிறுவனங்களும் இணை அனுசரணையார்களாக இணைந்துகொண்டுள்ளன.
விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் இலங்கை விளையாட்டுத் திருவிழா தொர்பான ஊடக சநதிப்பும் அனுசரணை வழங்கலும் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் போல் நியூமன், ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை ஹொக்கி சம்மேளனத் தலைவர் விஷ்வநாதன், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன செயலாளர் ஏ. எஸ். நாலக்க, ஆகியோரும் கலந்துகொண்டனர்.
டயலொக் ஆசியாட்டா குழுமம் சார்பாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுப்புன் வீரிசிங்க அனுசரணைக்கான உதவித் தொகையை விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் கே. மகேசன், சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.எல். நசீர் ஆகியோரிடம் கையளித்தார். டயலொக் ஆசியாட்ட குழுமத்தின் வர்த்தக குறியீடு, ஊடகப் பிரிவு சந்தைப்படுத்தல் உதவித் தலைவர் ஹர்ஷா சமரநாயக்க, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ரெயர் அட்மிரல் கலாநிதி ஷேமால் பெர்னாண்டோ ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.
பளட்டினம் ஸ்பொன்சர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பாக சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி உப்புல் நவரட்ன பண்டார, தேசிய கிரிக்கெட் அபிவிருத்தி தலைமை அதிகாரி சின்தக்க எதிரமான்ன ஆகியோர் அனுசரணை உதவித் தொகையை வழங்கினர்.
சினமன் ஹொட்டெல்ஸ் அண்ட் ரிசோஸ் சார்பாக சினமன் க்ராண்ட் பொதுமுகாமையாளர் கமல் முனசிங்க அனுசரணை உதவித் தொகையை வழங்கினார்.
சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் சார்பாக எலிபன்ட் ஹவுஸ் அண்ட் கீல்ஸ் புட்ஸ் பிஎல்சி சந்தைப்படுத்தல் முகாமையாளர், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உதவித் தலைவர் கசுன் குணரட்ன அனுசரணை உதவித் தொகையை வழங்கினார்.
பிரிமா சிலோன் பிறைவேட் லிமிட்டெட் சார்பாக இன்டர் ரயன் மார்க்கட்டிங் தலைமை அதிகாரியும் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளருமான அர்ஜுன ராமநாயக்க, சந்தைப்படுத்தல் முகாமையாளர் சிலோன் அக்ரியன் இண்டஸ்ட்ரிஸ் இக்மா குணவர்தவன ஆகியோர் அனுசரணை உதவித் தொகையை வழங்கினர்.
தக்ரல் சார்பாக உயர் அதிகாரி ஹில்மி நியாஸ் அனுசரணை உதவித் தொகையை வழங்கினார்.
உத்தியோகபூர்வ மீடியா ஸ்பொன்சர் எம்ரிவி சார்பாக பணிப்பாளர் ரொஷான் வட்டவல அனுசரணை உதவித் தொகையை வழங்கினார்.
உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளர் டிஜிடல் ஊடகம் தப்பரே.கொம் சார்பாக புபுது அளுத்கெதர, தபப்பரே.கொம் சிரேஷ்ட உற்பத்தி முகாiமாயாளர் டிஷான் ரிஸா ஆகியோர் ஆகியோர் அனுசரணை உதவித் தொகையை வழங்கினர்.
ஸ்ட்ரட்டஜிக் பார்ட்னார் ஐஜிபி குறூப் முகாமைத்துவப் பணிப்பாளர் அனில் மோகன் அனுசரணை உதவித் தொகையை வழங்கினார்.
எமெர்ஜிங் மீடியா சார்பாக பெர்னாண்டோ அனுசரணை உதவித் தொகையை வழங்கினார்.
ப்ரொஸ்டி சார்பாக பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முக்தார் அனுசரணை உதவித் தொகையை வழங்கினார்.
ட்ரைஅட் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜேசன் வெய்ட் அனுசரணை உதவித் தொகையை வழங்கினார்.
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM