ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட 25 சதவீதமான பிள்ளைகள் தூக்கமின்மைபிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது பல்வேறு உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ஆலோசகர் வைத்தியர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் பிள்ளைகள் மத்தியில் தூக்கம் குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட 25 சதவீதமான பிள்ளைகளுக்கு தூக்கமின்மை பிரச்சினை உள்ளது.
தூக்க சுகாதாரம் என்பது நல்ல தூக்கத்தை எளிதாக்கும் நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் நடைமுறைகளின் தொகுப்பாகும். இந்த காரணிகள் ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு உதவும் பழக்கங்களாகும்.
முன்பெல்லாம், சூரியன் மறையும் போது தூங்கச் செல்வதும், சூரியன் உதிக்கும் போது விழிப்பதும் வழக்கமாக இருந்தது.
செயற்கை வெளிச்சத்தின் நீடித்த பயன்பாடு மற்றும் கைத்தொலைபேசிகள், கணினிகள், டெப்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற சாதனங்களில் நேரத்தை செலவிடுவது மக்களின் தூங்கும் முறைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு உடல், மன மற்றும் சமூக பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு நிலையான நினைவாற்றல் இருக்க நல்ல தூக்கம் அவசியம் என்றார். எனவே, பிள்ளைகள் நல்ல உறக்கத்தைப் பெறுவதை உறுதிப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும்.
நல்ல தூக்கத்தைப் பழக்கப்படுத்த பல படி முறைகளை பின்பற்ற வேண்டும்.
தூங்கச் செல்லும் மற்றும் எழுந்திருக்கும் வழக்கமான நேரம், அவர்கள் தூங்கும் இடம், அவர்கள் தூங்கும் விதம், சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் தூக்கத்தின் காலம். பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்க்க உதவலாம்.
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேர தூக்கம் என்பது குறித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பிறந்து மூன்று மாதங்களுக்கு குழந்தைகள் ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணி நேரம் தூங்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.
4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை 12 முதல் 16 மணி நேரம், ஒரு வருடம் முதல் 2 வயது வரை 11 முதல் 14 மணி நேரம், 3 முதல் 4 வயது வரை 10 முதல் 13 மணி நேரம், 5 வயது குழந்தைக்கு 10 முதல் 12 மணி நேரம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 24 மணித்தியாலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உறக்கமும் தேவை. இது மன ஆரோக்கியத்தையும் மற்றும் உடல் வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்துமெனவும் வயதானவர்கள் குறைந்தது 7 மணிநேரம் உறங்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
தற்போதுள்ள தரவுகளின்படி, இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவது உகந்தது அல்ல.
பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் மேற்பார்வையின் கீழ் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் டிஜிட்டல் திரையை ஒரு நாளைக்கு அரை மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
உரத்த சத்தம் மற்றும் பிரகாசமான வெளிச்சம் உள்ள பகுதிகளில் பிள்ளைகள் தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அவர்களின் நல்ல தூக்கத்தையும், தூக்கத்தின் மூலம் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM