(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாட் சம்பளத்தை வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போது தான் அவ்வாறு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மக்களை ஏமாற்றியுள்ளார். எனவே அவர் யார் என்பதை இப்போதாவது மலையக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மலைய மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (8) ஐக்கிய மக்கள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் 5ஆம் தர மாணவர்கள் கூட அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச எனக் கூறுகின்றனர். அதாவது அவர்களின் பெற்றோர் ஏற்கனவே அதனை தீர்மானித்து விட்டனர்.
கடந்த மே மாதம் முதலாம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இ.தொ.கா. தலைவர் ஆகியோர் கொட்டகலையில் வைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாட் சம்பளத்தை வழங்குவதாகக் கூறினார். ஆனால் தற்போது நான் அவ்வாறு வாக்குறுதியளிக்கவில்லை என்கின்றார்.
கடந்த ஓரிரு மாதங்களில் ஜனாதிபதி கூறிய மிகப் பெரிய பொய் என்றால் அது இந்த பொய்தான். எனவே ஜனாதிபதி ரணில் யார் என்பதை மலையக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சஜித் பிரேமதாசவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM