(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சர்வதேச அறிமுகம் பெறாத வேகப்பந்து வீச்சாளர் மிலான் ரத்நாயக்க, 33 வயதான சகலதுறை வீரர் நிசல தாரக்க ஆகிய இருவரும் 18 வீரர்கள் கொண்ட குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக நிறைவுபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் அற்புதமாக பந்துவீசிய சுழல்பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டசேயும் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் 2022இல் அறிமுகமான ஜெவ்றி வெண்டசே அந்த ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தார்.
இதேவேளை, 2021இல் டெஸ்ட் அணியில் அறிமுகமான பெத்தும் நிஸ்ஸன்க, 2022க்குப் பின்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்ட நிஷான் மதுஷ்க நிலையாக இடம்பெற்றுவருகிறார்.
சிரேஷ்ட வீரர்களும் முன்னாள் தலைவர்களுமான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
டெஸ்ட் அணித் தலைவராக தனஞ்சய டி சில்வா தொடர்ந்து செயற்படவுள்ளார். உதவி அணித் தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் 3 டெஸ்ட் போட்டிக் நடைபெறுவதுடன் அவரை ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் அமையவுள்ளது.
முதலாவது போட்டி மென்செஸ்டர் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 21 முதல் 25 வரையும் இரண்டாவது போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 29முதல் செப்டெம்பர் 02 வரையும் 3ஆவது போட்டி லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் செப்டெம்பர் 6 முதல் 10 வரையும் நடைபெறும்.
இலங்கை குழாம்
தனஞ்சய டி சில்வா (தலைவர்), திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் (உதவித் தலைவர்), ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, லஹிரு குமார, நிசல தாரக்க, ப்ரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெவ்றி வெண்டசே, மிலான் ரத்நாயக்க.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM