(செ.சுபதர்ஷனி)
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த இரு சிரி ஸ்கேன் இயந்திரங்களும், இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்தோடு இயந்திர செயலிழப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளர்களும் வைத்தியசாலை சேவை ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.
தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திர செயலிழப்பு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாடளாவிய ரீதியில் பெருமளவான நோயாளர்கள் சிகிச்சைக்காக சமூகமளிக்கும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த நான்கு ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளன. அவற்றுள் இரு சிரி ஸ்கேன் இயந்திரங்களும் இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களும் உள்ளடங்குகின்றன. இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
தற்போது வைத்தியசாலையில் உள்ள இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை பயன்படுத்தி 24 மணிநேரமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் பரிசோதனைக்காக காத்திருக்கும் நோயாளர்களின் பட்டியல் நீண்டுள்ளது. குறித்த இயந்திரங்களில் முதல் இயந்திரம் பழுதாகி 5 மாதங்கள் கடந்துள்ளதுடன் இரண்டாவது இயந்திரம் பழுதாகி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. மேலும் சிரி ஸ்கேன் இயந்திரங்களில் முலாவது இயந்திரம் பழுதாகி 4 வாரங்கள் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டாவது இயந்திரம் செயலிழந்து இரு நாட்கள் கடந்துள்ளன.
இதனால் பட்டியலிடப்பட்டுள்ள நோயாளிகளுக்கான பரிசோதனைகளையும் இடைநிறுத்த வேண்டியது. பரிசோதனைகளை நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதால் உரிய சிகிச்சைகளை வழங்கமுடியாதுள்ளது இதனால் உயிராபத்துக்கள் ஏற்படும் சாத்தியப்பாடுகளும் அதிகரித்துள்ளன. பழுதடைந்துள்ள இயந்திரங்களை காலதாமதமின்றி மீள் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இச்செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM