சிறுநீரக திசு பரிசோதனை ஏன் அவசியம்..?

Published By: Digital Desk 7

08 Aug, 2024 | 08:20 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் சிறுநீரக கல் தொடர்பான விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக பலரும் சிறுநீரக கல் பாதிப்பு மற்றும் அதற்கான அறிகுறிகள் ஏற்பட்டவுடன்  உடனடியாக இத்துறையின் பிரத்யேக சிகிச்சை நிபுணர்களை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெறுகிறார்கள். ஆனால் சில தருணங்களில் சிலருக்கு சிறுநீரக திசு பரிசோதனை அவசியம் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்நிலையில் நோயாளிகளில் பலருக்கு இந்த பரிசோதனை ஏன் அவசியம்? என்பதில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இது குறித்தும் வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணங்களை துல்லியமாக அவதானிக்க இயலவில்லை என்ற தருணத்திலும் சிறுநீரக பாதிப்பிற்கான நிவாரண சிகிச்சையை மேற்கொள்ளும் போது பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் தருணத்திலும் எம் மாதிரியான சிகிச்சையை வழங்க வேண்டும் என்பதனை தீர்மானிப்பதற்காகவும், சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பை துல்லியமாக அவதானிப்பதற்காகவும், சிறுநீரக திசு பரிசோதனை அவசியமாகிறது.

இத்தகைய பரிசோதனையின் போது நோயாளிகளுக்கு மயக்க மருந்து வழங்கிய பிறகு, அல்ட்ரா சவுண்ட் கருவியின் உதவியுடன் சிறுநீரகத்தில் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட மிக நுண்ணிய அளவிலான ஊசி மூலம் சிறுநீரகத்தில் இருந்து பிரத்யேகமாக பாதுகாப்புடன் திசுக்கள் சிறிய அளவில் பரிசோதனைக்காக எடுக்கப்படுகின்றன.

பொதுவாக இத்தகைய தருணத்தில் இரண்டு சிறிய அளவிலான திசுக்கள் எடுக்கப்படுகின்றன. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறார்களாக இருக்கும் தருணத்திலும் அவர்களுக்கு எலக்ட்ரோ மைக்ரோஸ்கோபிக் எனும் பரிசோதனை கருவி மூலம் பரிசோதிக்க வேண்டும் எனும் தருணத்திலும் மட்டும் நோயாளிடமிருந்து மூன்று சிறிய அளவிலான திசுக்கள் சேகரிக்கப்படுகின்றன.

நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்து பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்ட திசுக்களை நுண்ணோக்கி வழியாக துல்லியமாக பரிசோதித்து, சிறுநீரக பாதிப்பு எதனால் ஏற்பட்டது?, அதன் பாதிப்பின் தன்மையும், வீரியத்தையும் துல்லியமாக அவதானிப்பது, இதற்கு எம்மாதிரியான சிகிச்சை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்?, இதற்கு சிகிச்சை அவசியமா? பலனளிக்குமா..? போன்ற ஐயங்களுக்கு இத்தகைய திசு பரிசோதனை துல்லியமான முடிவினை அறிவிக்கும்.

மேலும், இத்தகைய பரிசோதனையின் போது வெகு சிலருக்கு ரத்தக் கசிவு ஏற்படக்கூடும். மேலும் இத்தகைய பரிசோதனை மேற்கொண்ட பிறகு நோயாளி சிறுநீர் கழிக்கும் போது அதில்  ரத்தம் கலந்த சிறுநீர் வெளியாக கூடும். இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை.

இத்தகைய திசு பரிசோதனைக்குப் பிறகு வைத்திய நிபுணர்கள் சிறுநீரக பாதிப்பை அதற்கே உரிய நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

வைத்தியர் ஹரி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20
news-image

மேல் சுவாச குழாய் தொற்று பாதிப்பிற்குரிய...

2024-09-02 20:27:20
news-image

“நல்ல மருத்துவர்” என்பவர் யார்?

2024-09-02 14:52:00
news-image

குழந்தைகளின் இதய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-08-31 16:55:30
news-image

முதுகு வலிக்கான நவீன நிவாரண சிகிச்சை

2024-08-29 19:52:57
news-image

புற்றுநோய் பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-08-28 17:07:29
news-image

அல்சைமர் நோயால் ஆசிய நாட்டவர்கள் பலர்...

2024-08-28 17:11:08
news-image

மூளையில் ஏற்படும் கொலாய்டு நீர்க்கட்டி பாதிப்பிற்கான...

2024-08-27 17:42:14
news-image

இரத்த நாள அடைப்பு பாதிப்பை துல்லியமாக...

2024-08-26 17:26:59
news-image

ஃபுல்மினன்ட் ஹெபடிக் ஃபெயிலியர் எனும் கடுமையான...

2024-08-24 15:45:46