சமுத்திரக்கனியுடன் இணையும் கௌதம் வாசுதேவ் மேனன்

Published By: Digital Desk 7

08 Aug, 2024 | 08:15 PM
image

தமிழ் திரையுலகில் இயக்குநர்களாக அறிமுகமாகி, இன்று சிறந்த குணச்சித்திர நடிகராகவும் உயர்ந்திருக்கும் நட்சத்திர நடிகர்களான சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

'குறையொன்றுமில்லை' எனும் படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ரவி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் கார்த்திக் குமார், ஹரிதா, சமுத்திரக்கனி , கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திர மௌலி, படவா கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எம். கே. ராமானுஜன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தை பாத் வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது சமுத்திரக்கனி பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.  இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08
news-image

இயக்குநர் ராஜு முருகனுடன் இணையும் கௌதம்...

2024-09-14 10:53:20
news-image

சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை'...

2024-09-14 06:46:07
news-image

பாடகர் மனோவின் இரு மகன்களை கைதுசெய்ய...

2024-09-13 12:10:15
news-image

போரின் கொடுமைகளை அழுத்தமாக விவரிக்கும் ஹிப்...

2024-09-12 16:44:48