தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான காளி வெங்கட் முதன்முறையாக வில்லனாக நடிக்கும் 'மலை' எனும் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ஐ பி முருகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மலை' எனும் திரைப்படத்தில் யோகி பாபு, லக்ஷ்மி மேனன், காளி வெங்கட், சிங்கம் புலி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி. சௌந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் இப்படத்தின் பணிகள் தொடங்கி, படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
இதனிடையே யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வெளியான 'போட்' எனும் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றுள்ளதால் அவரது நடிப்பில் தயாராகும் 'மலை' எனும் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடையேயும் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM