நடிகர் பகத் ஃபாஸிலின் 'வேட்டையன்' அப்டேட்

Published By: L. Abhilashani

08 Aug, 2024 | 04:53 PM
image

மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் பகத் ஃபாஸிலின் பிறந்த நாளை முன்னிட்டு, 'வேட்டையன்' படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

'ஜெய் பீம்' படத்தை இயக்கிய இயக்குநர் தா. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பகத் ஃபாஸில், ரானா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்பட த்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

தீபாவளி திருநாளான ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திர நடிகரான பகத் ஃபாஸிலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் சுப்பர் ஸ்டார்கள் மத்தியில் பகத் ஃபாஸில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-10 15:55:39
news-image

நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட 'ஹைக்கூ'...

2026-09-10 17:13:50
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபாலி'...

2026-09-10 15:13:27
news-image

தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் 'சீன்'!

2026-09-10 14:34:57
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'கோல்டு கால்' திரைப்படத்தின்...

2026-09-09 15:44:52
news-image

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீமான்

2026-09-09 15:07:00
news-image

நடிகை சித்தி இத்னானி நடிக்கும் 'ட்ரோன்ஸ்'...

2026-09-09 14:58:29
news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39