இந்து - இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒத்துழைப்பு மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டுடன் பத்தரமுல்லை சந்துன் உயன வளாகத்தில் முதிரை மரக்கன்றுகள் நடப்பட்டது.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட "ப்ளாண்ட் 4 மதர்" திட்டத்துடன் இணைந்து முதிரை மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இன்று வியாழக்கிழமை (8) பத்தரமுல்லை சந்துன் உயன வளாகத்தில் நடைபெற்றது.
இதனை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தது.
இதன்போது, இந்து - இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒத்துழைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், வி. ராதாகிருஷ்ணன், ஜகத்குமார மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.எஸ். சத்யானந்த உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM