வாழ்வது என்பது ஒரு கலை ஒரு திறமை ஒரு நுட்பம். அதை நாங்கள் ஒரு இசைக்கருவியை வாசிப்பது அல்லது ஒரு ஆகாய விமானத்தை ஓட்டுவது போல் கற்றுப் பயிற்சி செய்ய வேண்டும்.”
- சுவாமி ஏ. பார்த்தசாரதி
இவ்வுலகில் நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறோம் ஆனால் உண்மையில் இந்த வாழ்க்கை என்றால் என்ன? எங்களுக்கு எப்படி நிரந்திர திருப்தி கிடைக்கும் என்று சிந்திக்காமல் நாங்கள் அன்றாட வாழ்வின் பரபரப்பில் மாட்டிக் கொள்கிறோம்.
உங்களுக்கு உங்களைத் தெரியுமா? உங்களுடைய வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் அவசியம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் சிந்திப்பதற்கும் ஒரு வழிகாட்டல் வேண்டுமா?
வேதாந்தா நிறுவனம் கொழும்பு ஒழுங்கு செய்யும் வாழ்க்கை உள்நோக்கு என்ற நான்கு வார கற்கைநெறி ஆகஸ்ட் 17 திகதி ஆரம்பமாகும். உலகம் போற்றும் வேதாந்த தத்துவஞானி மற்றும் எழுத்தாளர் சுவாமி ஏ. பார்த்தசாரதியின் புத்தகம் The Fall of the Human Intellect என்பதை அடிப்படையாக வைத்து இந்த கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கற்கைநெறி மூலம் கிடைக்கும் நன்மைகள் பல: தெளிவான சிந்தனை சரியான முடிவு எடுக்கும் திறமை ஒத்துழைப்பு வீட்டிலும் அலுவகத்திலும் ஒற்றுமை அமைதி மற்றும் வேலையிலும் தனிப்பட்ட வாழ்விலும் முன்னேற்றம்.
கற்கைநெறியில் கலந்துரையாடப்படும் தலைப்புகள்:
வாரம் 1: உங்களை அறிந்து கொள்ளுங்கள்
வாரம் 2: தெரிவின் சக்தி
வாரம் 3: வாழ்வின் இலட்சியத்தை தெரிவு செய்வது எங்ஙனம்
வாரம் 4: உண்மையான அன்பும் ஞானமும்
இந்த கற்கைநெறி ஆகஸ்ட் 17ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 4:30ல் இருந்து 6:00 மணி வரை நடைபெறும்.
இடம்: Oneness Centre, 3A Col. Jayawardena Mawatha, கொழும்பு 03.
இந்தகற்கைநெறியை சுவாமி பார்த்தசாரதியின் சிஷ்யை வேதாந்த ஆசிரியர் பேச்சாளர் உமையாள் வேணுகோபால் அவர்கள் நடத்துவார்.
இக் கற்கைநெறி இலவசமாகும். விபரங்களுக்கும் பதிவு செய்வதற்கும் எங்கள் இணையத்தளம் ற்கு செல்லவும் அல்லதுvedantacolombo.org 0710638837 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM