கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மீட்புப்பணியில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.