மஹியங்கனை, கிராந்துருகோட்டை - திவுல பெலஸ்ஸ பிரதான வீதியின் விரணகம பகுதியில் புதன்கிழமை (07) மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 கட்டை விரணகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் கொழும்பு பகுதியில் பணிபுரிபவர்கள் எனவும், விடுமுறைக்காக வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் சென்று கொண்டு இருக்கையில் குறித்த நபர் தூக்கத்தில் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதி அருகே மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் கிராந்துருகோட்டை ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.
பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த ஆகியோரின் பணிப்புரையின் பேரில் கிராந்துருகோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM