(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் கையெச்சாத்திடும் நிகழ்வு வியாழக்கிழமை (8) இடம்பெறவுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் காலை 9 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, பிரபா கணேஷன் தலைமையிலான மனித நேய மக்கள் கூட்டணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்ரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர தரப்பு உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இதற்கு முந்தைய தேர்தல்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்தே செயற்பட்டது. எனினும் இம்முறை அக்கட்சி அவ்வாறானதொரு தீர்மானத்தை அறிவிக்கவில்லை. அடுத்த வாரமே தாம் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை மேலும் பல சிவில் அமைப்புக்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய இவ் ஒப்பந்தம் இன்றைய தினம் கையெழுத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM