(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
இந்தியாவுக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த இலங்கை 110 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கைப்பற்றியது.
இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 27 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக கைப்பற்றி இலங்கை வரலாறு படைத்தது.
அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், துனித் வெல்லாலகே பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.
முன்வரிசை வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் ஆகியோர். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியபோதிலும் மத்திய வரிசை மீண்டும் சரிவுகண்டது.
பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பெத்தும் நிஸ்ஸன்க அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து 45 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் 2 ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.
அவிஷ்க பெர்னாண்டோ சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது கவனக் குறைவான அடி காரணமாக 96 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டம் இழப்பதற்கு முன்னர் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அதன் பின்னர் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்தது.
எவ்வாறாயினும் குசல் மெண்டிஸும் கமிந்து மெண்டிஸும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.
249 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 26.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான தோல்வியைத் தழுவியது.
இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமப்பட்ட இந்திய துடுப்பாட்ட வீரர்களில் ஆறு பேர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (35), விராத் கோஹ்லி (20), ரியான் பராக் (15), வொஷிங்டன் சுந்தர் (30) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டசே 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: அவிஷ்க பெர்னாண்டோ; தொடர் நாயகன்: துனித் வெல்லாலகே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM