மன்னார் நீதிமன்றத்தினால் புதன்கிழமை (7) நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினர்.
கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள் அத்துமீறி நுழைந்து கடமைக்கு இடையூறை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வைத்தியரை சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவரை இன்றைய தினம் 7ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம்(7) குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அர்ச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.
வைத்தியர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
மன்னார் நீதிவான் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
இந்த நிலையில் மன்றிலிருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேற்றனர்.
பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மன்னார் - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.
மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) எனத் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணின் மரணத்தின் போது சம்பவ தினம் விடுதியிலிருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் எனக் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் அங்கு கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM