இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் மீனவர்களும் இணங்கிய ஒப்பந்ததை நடைமுறைபடுத்துங்கள் அதுமட்டுமன்றி இந்திய மீனவர்கள் வடபகுதிக்கு நேரில் வந்து எமது வாழ்கை முறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கு விரைவான ஏற்பாடுகளை செய்யுமாறு யாழ்.மாவட்ட கடற்மொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் முன்னாள் தலைவரும் அகில இலங்கை மீனவ மக்கள் தொழில் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தொரிவித்தார்.
இலங்கை இந்திய பிரதிநிதிகள் இடையே சந்திப்பை ஏற்படுத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் என்.ஜெய்சங்கர் உறுயளித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறைகளால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவது மட்டுமன்றி ஒட்டுமொத்த வடக்கிற்கான வாழ்வாதாரம் பொருளாதரம் பாதிக்கப்படுகின்றது கடற்தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்லவேண்டிய சூழலே தோன்றியுள்ளது.
இந்திய மீனவர்களது அத்து மீறல்களை நிறுத்தக்கோரி போராட்டங்களை கோரிக்கைகள் என் பலவிதமான போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டோம் பல கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 2016 ஆம் ஆண்டு இருதரப்பு போச்சுவார்த்தையில் பல இணக்கம் காணப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத்தினாலே தீர்வினை ஏட்டக்கூடியதாக இருக்கும் 2016 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட தீர்மானங்களில் குறிப்பாக இழுவைமடி தொழில் முறைக்கான மாற்றத்தினை துரிதமாக மேற்கொள்ளுதல் ,ரோந்து நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்கான சாத்தியங்களை ஆராய்தல் ,கைதான மீனவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை கடினமாக்குதல் ,கைதான மீன்பிடி படகுகளை விடுவிக்கும் பிரச்சினைகள் குறித்து ஆழமாக அவதானம் செலுத்துதல் போன்றன இணக்கம் காணப்பட்டது.
இவற்றை நடைமுறைபடுத்தினாலே மீனவர்கள் பிரச்சினைகளை குறைத்துகொள்ள முடியும். இது மட்டுமன்றி தமிழ்நாட்டு மீனவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு விஐயம் செய்து எமது மீனவர்களது வாழ்வாதாரங்களை அறிவதற்கு கலந்துரையாடலை மேற்கொள்வதன் மூலமும் இந்த பிரச்சினைகளை அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் இது எவ்வாறு இருப்பினும் வெகு விரைவில் ஒரு தீர்வினைக்கண்டு வடகிழக்கு மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வினை கண்டுக் கொள்ள இந்தியா உதவி செய்யவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM