ஐக்கிய மக்கள் சக்தி - சுதந்திர கட்சி சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணி அல்ல - சஜித் பிரேமதாச!

07 Aug, 2024 | 05:40 PM
image

(எம்.மனோசித்ரா)

தேர்தல் காலங்களில் உருவாகும் ஏனைய கூட்டணிகளைப் போன்று எமது கூட்டணி சந்தர்ப்பவாத அரசியலை நோக்கமாகக் கொண்டதல்ல. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னையோ, எமது கூட்டணியையோ எவராலும் விலைக்கு வாங்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வோட்டஸ் எட்ஜ் ஹோட்டலில் புதன்கிழமை (07)  சுதந்திர கட்சியுடன் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தேர்தல் காலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் பல கூட்டணிகள் உருவாகும். ஆனால் எமது கூட்டணி வெறுமனே அரசியலை மாத்திரம் நோக்கமாகக் கொண்ட சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும்இ ஐக்கிய மக்கள் சக்திக்கும் தெளிவான இலக்கொன்று காணப்படுகிறது. 

அடிப்படைவாதம், இனவாதம்,  மதவாதத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. முதலாளித்துவ ஆட்சி இன்றி மக்கள் ஆட்சி அமைக்கப்பட வேண்டும். எமது இந்த பயணத்தில் பொது மக்களை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும். இதற்கும் அனைவரும் உள்வாங்கப்படுவர்.

220 இலட்சம் மக்களுக்காக நாம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம். எமது ஆட்சியில் பொறுப்புக்களை ஏற்பவர்கள் குடும்ப ஆட்சியை புறந்தள்ள வேண்டும். எனவே அமைச்சுப்பதவிகள் பற்றியோஇ கட்சியில் ஏனைய பதவிகள் பற்றியோ இப்போதே எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவும் கூடாது. மாறாக நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இன்று  எமது நாடு ஏலத்தில் தேசிய சொத்துக்களை விற்கும் நாடாக மாற்றமடைந்துள்ளது. இவ்வாறான நிலைமையை மாற்றி கடன் தொல்லையிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும். யார் எதைக் கூறினாலும் என்னை விலைக்கு வாங்கவோ, பதவி ஆசைகளைக் காண்பித்து பொறுப்புக்களை வழங்கவோ முடியாது. எந்த காரணத்துக்காகவும் மனசாட்சியை நாம் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52
news-image

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

2024-09-16 15:25:21
news-image

அடுத்த மாதம் புதிய இ-கடவுச்சீட்டு அறிமுகம்

2024-09-16 16:28:14
news-image

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின்...

2024-09-16 15:02:31
news-image

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் -...

2024-09-16 15:20:20
news-image

அதிவேக வீதியில் நிலத்தடி மின் கம்பிகளை...

2024-09-16 14:52:37