பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன் - தி பியானிஸ்ட்' - முன்னோட்டம் வெளியீடு

07 Aug, 2024 | 04:38 PM
image

'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன் தி பியானிஸ்ட்' எனும் திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன் - தி பியானிஸ்ட்' எனும் திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக், யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் , ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம்  சார்பில் தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார். 

எதிர்வரும் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற பிரத்யேக சிறப்பு முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் பங்கு பற்றினர். 

நடிகர் பிரசாந்த் பேசுகையில் '' இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.  இது படத்தின் சிறப்பம்சம். இந்த திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 இது ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விடயமாகும்.  இந்தத் திரைப்படத்தை பட மாளிகைக்கு மீண்டும் மீண்டும் வருகை தந்து ரசிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. ஓகஸ்ட் ஒன்பதாம் திகதியன்று இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் படமாளிகையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57