'புரட்சித் தமிழன்' சத்யராஜ் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் ... திரைப்படம், இணையதள தொடர் ..என பல்வேறு பொழுதுபோக்கு அம்ச வடிவங்களிலும் நடித்து வருவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவருடைய நடிப்பில் தயாராகி இருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' எனும் இணையத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இணைய தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாகிறது.
இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' எனும் இணைய தொடரில் சத்யராஜ், ரேகா, சீதா, வர்ஷா பொல்லம்மா, ரக்சன், லிவிங்ஸ்டன், அஜித் காலீக், கிருத்திகா மனோகர், ராகவி, ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை தயாரிப்பாளர் முகமது ரஷீத் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள இந்த இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சத்யராஜ் -ரேகா- சீதா -ரேஷ்மா ஆகியோர் தோன்றுவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால்... டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெற்று இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM