ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப மீண்டெழுகைக்கான நிறுவன விருதை வென்றது NDB

07 Aug, 2024 | 03:10 PM
image

ISACA இனால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்புமிக்க எண்ணிய நம்பிக்கை விருதுகள் 2024 இல் வங்கிச்சேவைகள் - உள்நாட்டு பிரிவின் கீழ்  NDB வங்கியானது  "2024 ஆம் ஆண்டின் தொழில்நுட்ப  மீண்டெழுகைக்கான கம்பெனி" என கௌரவிக்கப்பட்டுள்ளது.

ISACA (தகவல் முறைமைகள் தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு சங்கம்) என்பது தகவல் தொழில்நுட்ப ஆளுகைக்காக அர்ப்பணிக்கப்பட்டவொரு நன்கறியப்பட்ட  சர்வதேச தொழில்சார் சங்கமாகும். ISACA இன் இலங்கை பிரிவு தகவல் பாதுகாப்பில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக "எண்ணிய நம்பிக்கை விருதினை" ஆரம்பித்தது.

NDB வங்கியியல் பிரிவில் "வெற்றியாளர்" ஆக தெரிவு செய்யப்பட்டது.  பாதுகாப்பான வங்கிப் பங்காளியாக NDB மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையானது  இந்த விருது மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது எண்ணிய துறையில் மிகவும் நம்பகமான வங்கிப் பங்காளியாக NDB இன் நிலையை மேலும்  உறுதிப்படுத்துகிறது.   

தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப  சட்ட முன்னோடியான திரு. ஜயந்தபெர்னாண்டோ உட்பட தொழில்துறை வல்லுனர்களை உள்ளடக்கிய கௌரவத்துக்குரிய  நீதிபதிகள் குழுவானது , சிறந்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் இன்றைய வளர்ந்து வரும் அச்சுறுத்தல் சவால்களை சமாளித்து  போராடுவதற்கான NDB இன் புதுமையான உத்திகளை அங்கீகரித்து வெற்றியாளராகத் தீர்ப்பளித்தது. 

ரசிக சம்பத் தலைமையில் நடுவர் அமர்வில் விருதுக்காக போட்டியிட்ட NDB இன் வெற்றியாளர் அணியில் பசிந்து பண்டார, கல்ஹாரி கமகே, ரனித் தரரத்ன மற்றும் டில்ஷான் லங்காதிலக ஆகியோர் அடங்குவர்.

NDB தகவல் தொழில்நுட்ப [IT] பாதுகாப்பில் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளதுடன் சமீபத்திய காலங்களில் பாதுகாப்பு துறையில் பல விருதுகளை வென்றுள்ளது. NDB ஆனது அதன் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமைக்காக சமீபத்திய ISO 270001:2022 ஐப் பெற்ற முதல் வங்கியாக திகழ்வதுடன் மேலும் இலங்கையில் அதன் வர்த்தகத்  தொடர் முகாமைத்துவ  முறைமைக்காக  (BCMS) ISO 23301 சான்றிதழ் பெற்ற ஒரே வங்கியாக இது உள்ளது. மேலதிகமாக , NDB ஆனதுகடந்த ஆண்டு சிறந்த தர மென்பொருள் தேசிய விருதுகளில் (NBQSA) வங்கியின் தகவல் பாதுகாப்புத் திட்டத்தை முகாமைத்துவம்  செய்யும் செக்யூர் 360 செயலி பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தையும் பெற்றது. 

NDB தகவல் தொழில்நுட்ப [IT] பாதுகாப்பு  தலைவர்  ரசிக சம்பத் தெரிவிக்கையில் 'நாங்கள் தொழில்துறையில் சிறந்தவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம், சந்தையில் சிறந்த பாதுகாப்பு தீர்வுகளைப் பெறுகிறோம், மேலும் பணிபுரிய சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்; இந்த மைல்கற்களை அடைய புத்தாக்கம் அவசியம்.  பாதுகாப்பு குறித்த முகாமைத்துவத்தினதும்  தலைமைத்துவத்தினதும் ஆழமான புரிதலானது தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு தொடர்பான அனைத்து மைல்கற்களையும் அடைவதற்கான கருவிகளாகவுள்ளன. எம்மிடம் மேலும் பணிக்கக்கூடிய  அர்ப்பணிப்பான குழு உள்ளது.  

IT பாதுகாப்பில் NDB இன் சாதனைகளானவை  சான்றிதழ்கள் மற்றும் விருதுகளுக்கு அப்பாற்பட்டவையாகும். இணையப் பாதுகாப்பிற்கான வங்கியின் முழுமையான அணுகுமுறையானது தொடர்ச்சியான கண்காணிப்பு, வழக்கமான தணிக்கைகள் மற்றும் செயலில் உள்ள இடர் முகாமைத்துவம்  ஆகியவற்றை உள்ளடக்கியது. மேம்பட்ட பாதுகாப்பு தீர்வுகளை ஒருங்கிணைப்பதன் மூலமும், விழிப்புணர்வின் கலாசாரத்தை வளர்ப்பதன் மூலமும், NDB அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வலுவானதாகவும், மீள்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்கிறது. 

முன்னோக்கிப் பார்க்கும்போது, NDB IT பாதுகாப்பில் அதன் சிறந்த பயணத்தை தொடர தயாராக உள்ளது. வங்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கும், தொடர்ச்சியான முன்னேற்றத்தின் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. 

இறுதியில் , ISACA விடமிருந்து 2024 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்ப மீண்டெழுகைக்கான கம்பெனியாக NDB அங்கீகரிக்கப்பட்டமையானது   தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்து விளங்கும் வங்கியின் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குகின்றது. இந்த அங்கீகாரம் NDB இன் சாதனைகளைக் கொண்டாடுவதுடன்  மட்டுமல்லாமல் நம்பகமான மற்றும் பாதுகாப்பான வங்கிப் பங்காளியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது. NDB அதன் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் , அதன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதிலும், வங்கித் துறையில் புதிய அளவுகோல்களை அமைப்பதிலும் உறுதியாக உள்ளது. 

NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல்  மற்றும் நிதி சில்லறை வங்கியியல்  விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக  இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக  இலங்கையின் LMD சஞ்சிகையினால்  வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின்  வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக  தெரிவு செய்யப்பட்டது.  

மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் "இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில்" ஒன்றாக  பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல்  மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல்  தீர்வுகளினை பயன்படுத்தி  அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

வலமிருந்து நிற்பவர்கள்: ரணித் தர்மரத்ன, பசிந்து பண்டார, அச்சிரவுவின், கே.வி.வினோஜ் (பிரதி  பிரதம நிறைவேற்று அதிகாரி), கெலும்எதிரிசிங்க (பிரதம நிறைவேற்று அதிகாரி), ரசிக சம்பத், இந்திக்க குணவர்தன (CIO/VP-IT), கல்ஹாரி கமகே, பமோத் மதுசங்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54
news-image

இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC)...

2024-09-06 09:46:27
news-image

குழந்தைப் பருவ விருத்தியில் பெரும் மாற்றத்திற்காக...

2024-08-29 19:34:33
news-image

கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச்...

2024-08-27 14:20:30
news-image

அமானா வங்கி மற்றும் Prime குரூப்...

2024-08-26 15:21:48
news-image

2024\25இன் முதலாவது காலாண்டில் வலுவான செயற்றிறனைக்...

2024-08-20 21:41:17
news-image

இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை...

2024-08-20 15:28:49
news-image

தேயிலை ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னணி வகிக்கும்...

2024-08-26 14:41:55
news-image

இலங்கையின் போக்குவரத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க Plug-in...

2024-08-15 15:16:18
news-image

2024 தேசிய வணிக விசேடத்துவ விருது...

2024-08-15 14:31:40
news-image

இளம் தொழில்முனைவோரை வலுப்படுத்தல் : சிறு...

2024-08-13 21:09:24
news-image

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுடன்...

2024-08-09 16:42:11