(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
வி.எப்.எஸ். கொடுக்கல் வாங்கல் மூலம் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையைவிட நூறு மடங்கு கொள்ளை இடம்பெறுவதை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறோம். அதனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசாங்கத்தின் கண்ணத்தில் அரைந்ததுபோல் உள்ளது. அத்துடன் வி.எப்.எஸ். காெடுக்கல் வாங்கல் தொடர்பில் எந்த இலத்திரனியல் ஊடகத்திலும் விவாதிப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) இடம்பெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வி.எப்.எஸ்.கொடுக்கல் வாங்கல் மூலம் பணம் கொள்ளையிடும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் மத்திய வங்கி கொள்ளையைவிட நூறுமடங்கு கொள்ளைக்கு இந்த அரசாங்கம் தயாராகி அமைச்சரவையில் இரகசியமாக இதனை அனுமதித்துக்கொண்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குள் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலத்திரணியல் கட்டமைப்பில் விசா வழங்கும் நடவடிக்கையை மொபிடல் நிறுவனம் 2012இல் இருந்து வழங்கி வந்தது. அதற்காக மொபிடல் நிறுவனத்துக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் மொபிடல் நிறுவனம் அதன் இலத்திரணியல் கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துவரும் நிலையில், அந்த நிறுவனத்துக்கு தெரியாமல் இந்த விசா வழங்கும் நடவடிக்கையை போலி நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதித்துக்கொண்டார்கள்.
என்றாலும் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் உயர் நீதிமன்றில் முன்வைத்த அறிக்கைகளை பார்த்து, குறித்த போலி நிறுவத்துக்கு தடை உத்தரவொன்றை நீதிமன்றம் வழங்கியது. நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ள நிலையில் இந்த வழக்கின் பிரதிவாதியான குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரும் அந்த அமைச்சின் செயலாளரும் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதனால் நீதிமன்ற உத்தரவுக்கமைய விசா வழங்கும் நடவடிக்கையை பழைய முறைக்கு செயற்படுத்த தவறினால் இந்த அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்போம். அதேநேரம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரத்துக்கு கீழ் இருக்கவேண்டிய அரசாங்கத்தின் இணைத்தளத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு திருப்புவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் செயற்பட்டுள்ளார்.
மேலும், வி.எப்.எஸ். நிறுவனம் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளிடமிருந்து அரை டொலரை பெறுகிறது. அதேநிறுவனம் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு செல்ல அரை டொலரை பெறுகிறது. ஆனால் அதேநிறுவனம் இலங்கைக்கு வருவதற்கு 25 டொலரை பெறுகிறது. 16 வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் காெடுத்துள்ளதன் மூலம் வி.எப்.எஸ் நிறுவனம் இந்த விசா கொடுக்கல் வாங்கல் மூலம் 2.75 பில்லியன் டொலரை சம்பாதித்துக்கொள்கிறது.
எனவே நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளரும் அமைச்சின் செயலாளரும் செற்பட தவறினால் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகுவார்கள். அதேபோன்று இந்த விசா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே எங்களுக்கு சவால்விடுத்தார். அதனால் இது தொடர்பில் எந்த இலத்திரனியல் ஊடகத்திலும் விவாதிக்க நாங்கள் தயார் என்பதை அவருக்கு சவாலாக தெரிவிக்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM